Viral Video : திருமண பரிசாக நீல நிற டிரம்… மணமக்களுக்குக் காத்திருந்த சர்ப்ரைஸ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Unexpected Wedding Gift : உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு திருமணத்தில், நண்பர்கள் புதுமணத் தம்பதியருக்கு நீல நிற டிரம்மை பரிசாக வழங்கியுள்ளனர். ஆரம்பத்தில் பீதியளித்தாலும், உள்ளே குழந்தைகள் விளையாடும் பொம்மை இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர் ஆரம்பத்தில் பயந்ததாகவும், வித்தியாசமான பரிசு எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பாக நடைபெறும் ஒரு விழா என்றால் அது திருமணம்தான் (Marriage). அந்த திருமணத்தில் இரு மனங்கள் ஒன்றாக இணைவதை விட இரு குடும்பங்கள் ஒன்றாக இணைவதுதான் சிறப்பு. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தின் (Uttar Pradesh) ஹமீர்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் , மணமக்களுக்கு (Bride and groom) நண்பர்கள் இணைந்து சிறப்பான பரிசை கொடுத்துள்ளனர். அந்த பரிசைப் பார்த்தவர்களுக்கு ஆரம்பத்தில் பீதியாகத்தான் இருந்திருக்கும். அவ்வாறு அந்த மணமக்களுக்கு நண்பர்கள் என்ன பரிசை கொடுத்துள்ளனர் தெரியுமா, வேறு எதுவும் இல்லை. நீல நிற பிளாஸ்டிக் டிரம்தான் (Blue plastic drum). அந்த டிரம்மில் காத்திருந்தது மற்றொரு சர்ப்ரைஸ் , அது வேறு எதுவும்மில்லை. குழந்தைகள் வைத்து விளையாடும் கிலுக்கு பொம்மைதான். ஆனால் இந்த பரிசை முதலில் பார்த்த தம்பதியர்களுக்குப் பயங்கர பீதியாகத்தான் இருந்திருக்கும்.
ஏனென்றால் சமீபத்தில் ஒரு கொலை வழக்கில், கணவர் தனது மனைவியைக் கொலை செய்து டிரம்மிற்குள் வைத்திருந்த விஷயம் நினைவிற்கு வந்திருக்கும். அது போல் இந்த நண்பர்கள் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்களா என ஆரம்பத்தில் பீதி அடைந்தனர். ஆனால் அவ்வளவு பெரிய டிரம்மில் அவர்கள் குழந்தைகள் வைத்து விளையாடும் கிலுக்கு பொம்மையை வைத்திருந்தனர். தற்போது இந்த வீடியோவானது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இணையவாசிகளிடையே வைரலாகும் அந்த வீடியோ :
इससे भद्दा मज़ाक और क्या हो सकता है! शादी जैसे खुशी के मौके पर एक जघन्य हत्याकांड को मज़ाक के रूप में याद करने को कतई उचित नहीं कहा जा सकता।
👉उत्तर प्रदेश के जिला हमीरपुर में शादी के दौरान दोस्तों ने दूल्हा–दुल्हन को “नीला ड्रम” गिफ्ट किया। pic.twitter.com/tvGnVlWsIb
— बेसिक शिक्षा सूचना केंद्र (@Info_4Education) April 19, 2025
இந்த வீடியோவில், புதுமண தம்பதிகளுக்கும் நண்பர்கள் நீல நிற டிரம்மை பரிசாகக் கொடுக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த வீடியோவை பார்ப்பதற்கு பீதியாக இருந்தாலும், அவர்கள் அந்த டிரம்மில் காமெடியான பரிசை வைத்திருக்கின்றனர். சாதாரணமாகப் புதுமண தம்பதிகளுக்கு, பரிசாகப் பல பொருட்களை வழங்குவது இயல்புதான். ஆனால் சமீபகாலமாக நண்பர்கள் திருமணத்தில் வித்தியாசமான பரிசுகளைக் கொடுத்து காமெடி செய்து வருகின்றனர்.
அதிலும் சிலர் குழந்தைகள் பயன்படுத்தும் டயப்பர் மற்றும் எதிர்பார்க்காத பல பரிசுகளைத் திருமணத்தில் புதுமண தம்பதிகளுக்குக் கொடுக்கின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தின் ஹமீர்பூரில் நடந்த திருமண விழாவில், நண்பர்கள் இணைந்து புதுமண தம்பதிகளுக்கு நீல நிற டிரம்மை வழங்கியுள்ளனர். அந்த டிரம்மில் குழந்தைகள் வைத்து விளையாடும், கிலுக்கு பொம்மையைப் பரிசாகக் கொடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் வீடியோவின் கீழ் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :
இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர் “இந்த வீடியோவை ஆரம்பத்தில் நான் பார்க்கும் போது, மிகவும் பீதி அடைந்தேன். அதற்குள் அவர்கள் வேறு எதுவும் வைத்துக் கொடுத்திருப்பார்களோ என்று , ஆனால் அப்படி இல்லை. எனக் கூறியுள்ளார். இரண்டாவது நபர், புதுமண தம்பதிகளுக்கு இப்படியா பரிசை கொடுப்பார்கள். நான் முதலில் அதில் வேறு எதுவும் வைத்திருப்பார்கள் என்று நினைந்தேன் என அவர் கூறியுள்ளார்.