Viral Video : உள்பக்கம் லாக்கான கதவு… மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!
Cat That Saved Its Owner : பெண் ஒருவர் வீட்டின் வெளியே மாட்டிக் கொண்டபோது, அவருடைய பூனை அதிசயமாக கதவைத் திறந்து அவருக்கு உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பூட்டப்பட்ட கதவை பூனை எவ்வாறு திறந்தது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ, செல்லப் பிராணிகளின் புத்திசாலித்தனத்தையும், மனிதர்களுடனான அவற்றின் பிணைப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

உரிமையாளரை காப்பாற்றிய பூனை
வீடுகளில் மனிதர்கள் பொதுவாகச் செல்லப்பிராணிகளை வளர்ப்பது (pets) இயல்புதான். அந்த பிராணிகளுக்கும் நமது மகிழ்ச்சி மற்றும் சோகங்கள் என அனைத்தும் தெரியும். மேலும் மனிதர்கள் செல்லப்பிராணிகளை தங்களின் சோகத்தை மறக்கவும், வீட்டிற்குக் காவலாகவும் வளர்க்கின்றனர். (forget sadness and guard the house) குறிப்பாக நாய், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். அந்த வகையில் வெளிநாட்டில் பெண் (Woman abroad) ஒருவர் வீட்டின் வெளியில் மாட்டிக்கொண்ட நிலையில், கதவைத் திறந்துவிட்டு அசாதாரணமான செயலை செய்துள்ள பூனையின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் பெண் வீட்டின் வெளியில் சிக்கிக்கொண்டுள்ளார். அவரின் வீட்டின் கதவு உள்பக்கமாக லாக் ஆகியிருக்கிறது. அவர் வீட்டினுள் அவரின் செல்லப்பிராணியான பூனை (Cat) மட்டுமே இருந்துள்ளது.
அந்த பூனையிடம் இவர் கதவை திறக்கும்படி கேட்கிறார். அதற்குப் பூனையும் பதில் பேசும் விதத்தில் மியாவ் மியாவ் என்று கத்துகிறது. மீண்டும் மீண்டும் அந்த பூனையின் உரிமையாளர் கதவைத் திறக்கும்படி பூனையிடம் கேட்கிறார். அந்த பூனையும் சிறிது நேரத்தில், உள் பக்கமாகப் பூட்டியிருந்த கதவைத் திறக்கிறது.
இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயமாக நம்பமுடியாது. அந்த பூனையா திறந்தது என்று நமக்கே சந்தேகம் வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் நம்பமுடியாததாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எவ்வாறு அந்த பூனையானது கதவைத் திறந்திருக்கும் என்பதை வீடியோவை பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
பொதுவாக விலங்குகள் சில சமயங்களில் நம்பமுடியாத விஷயங்களின் செய்துவருகின்றன. புதிய ஜெனரேஷன் உருவாகிவரும் நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை அப்டேட்டாகி வருகிறது. அதுவும் மனிதர்களைப் போலவும் சிந்திக்கிறது என்று தெளிவாக் தெரிகிறது. அதிலும் பூனை மற்றும் நாய்கள் மிகவும் புத்திசாலித்தனமான செயல்களைச் செய்துவருகின்றன.
அந்த வகையில் வீடியோவில் அந்த கருப்பு பூனை செய்த விஷமானது முற்றிலும் நம்பமுடியவில்லை. எவ்வாறு இந்தப் பூனை ஓனரின் பேச்சைக் கேட்டு கதவை திறந்திற்குக்கும் என்று நமக்கே சந்தேகம் இருக்கிறது. ஆனால் இந்த வீடியோவை பார்க்கும்போது அது உண்மை தன என்று தெரிகிறது. வீட்டின் உள்ளே வேறு எந்த நபர்களும் இருந்த மாதிரி தெரியவில்லை. உண்மையில் இந்த பூனைதான் திறந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வீடியோவை Itgirl என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது மில்லியன் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :
இந்த வீடியோவின் கீழ் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சில கருத்துக்களைப் பார்க்கலாம். இதில் முத்த பயனர் ஒருவர்” இந்த வீடியோவில் நிச்சயமாக அந்த பூனை திறந்திருக்க வாய்ப்புகள் இல்லை, உள்ளே இருந்து யாராவது திறந்திருக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இரண்டாவது நபர் இப்படி ஒரு பூனை என்னிடம் இல்லையே, என் பூனைகள் எல்லாம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குகிறது என்று கூறியுள்ளார்.