Viral Video : கன்றை விரட்டிய சிங்கங்கள்.. கூட்டமாகச் சேர்ந்துத் துரத்திய காட்டெருமை கூட்டம்.. வைரலாகும் வீடியோ!
Buffalo Vs Lions :தாய் எருமை தனது கன்றுக்குட்டியைக் காப்பாற்ற சிங்கக் கூட்டத்திடம் போராடிய வைரல் வீடியோ இணையத்தை கவர்ந்துள்ளது. ஒற்றுமையின் அடையாளமாக எருமை கூட்டம், சிங்கங்களை விரட்டியடித்தது. இது இயற்கையின் வழக்கமான நிகழ்வாக இருந்தாலும், தாய் பாசத்தின் அற்புதமான வெளிப்பாடாக இந்த வீடியோ பார்க்கப்படுகிறது.

பொதுவாக காட்டு விலங்குகள் (Wild animals) ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கின்றன. காடுகளின் வாழும் விலங்குகள் 70% சதவீதத்திற்கும் மேல் அனைத்துண்ணிகள் (Omnivores) உயிரினங்களாகத்தான் இருந்து வருகிறது. மேலும் ஒரு விலங்கு மற்றொரு விலங்குகளை வேட்டையாடி உண்பது அதன் இயல்பு. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் தாய் காட்டெருமை ( buffalo) தனது குட்டியைக் காப்பாற்றுவதற்காகச் சிங்கங்களுடன் (lions) சண்டையிடும் வீர தீரக் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காட்டெருமையானது தாய்ப் பாசம் இந்த உலகில் எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டும் விதத்தில், தனது குட்டிக்காக சிங்கங்களை எதிர்த்துச் சண்டையிடுகிறது . அந்த சிங்க கூட்டமும், தாய் காட்டெருமை துரத்தத் துரத்த மீண்டும் மீண்டும் காட்டெருமை குட்டியைப் பிடிக்க முயற்சி செய்கின்றன.
மேலும் அதைத் தொடர்ந்து மற்ற காட்டெருமைகள் கூட்டம் அதனுடன் இணைந்தது. பின் கூட்டமாக இணைந்த காட்டெருமைகள் சிங்கங்களை துரத்தியடித்தது. இந்த காட்டெருமைகளின் கூட்டத்தைப் பார்த்த சிங்கங்கள் பயந்து ஓடியது. தற்போது சிங்கங்களையே துரத்தியடித்த காட்டெருமைகளின் வீரம் குறித்த இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பல்வேறு பயனர்கள் இந்த வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர்..
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
View this post on Instagram
இந்த வீடியோவில், அந்த காட்டெருமை குட்டியைக் காப்பாற்றுவதற்கு முதலில் தாய் காட்டெருமை செய்யும் விஷயமானது அசாதாரணமானது. தனது குட்டியைக் காப்பாற்றுவதற்குத் தனது உயிரையும் கூட துச்சமாக நினைக்கவில்லை. அந்த காட்டெருமையின் செயலானது இணையதளத்தில் பயனர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோவில் வரும் காட்சிகளைப் பார்ப்பதற்குப் வருத்தமாக இருந்தாலும், அது இயற்கையில் இயல்பான ஒன்றுதான். உணவு சங்கிலியில் எல்லா விலங்குகளும் மற்றொரு விலங்குகளைச் சார்ந்துதான் இருக்கிறது. ஆனால் இந்த வீடியோவில் காட்டெருமைகளின் ஒற்றுமையைக் குறிக்கிறது. இந்த வீடியோ நமக்கு உணர்த்துவது எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றிபெறமுடியும் என்பதுதான். இந்த வீடியோவானது இணையதளங்களில் சுமார் மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் பலராலும் பகிரப்பட்டுள்ளது.
வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :
இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர், அதில் சிலவற்றைப் பார்க்கலாம். இதில் முதல் பயனர் ஒருவர் ” உலகத்தில் தாயை மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை” என்று கேஜிஃஎப் படத்தின் வசனத்தைக் கூறியுள்ளார். இரண்டாவது நபர் “சிங்கம்தான் காட்டிற்கு ராஜா, அந்த சிங்கத்தை நான்கு எருமைகள் ஒன்று சேர்ந்தால் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்” என்று கூறியுள்ளார்.