Viral Video : இருமனம் இணைந்த இரு மாநில திருமணம்… பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வெளியிட்ட வைரல் வீடியோ!
British Influencers Indian Wedding Experience : பிரிட்டிஷ் இன்ஃப்ளூயன்சர் நிக் புக்கர், கர்நாடகாவில் நடந்த பஞ்சாபி-கர்நாடகா திருமணத்தில் கலந்து கொண்டு, தனது அனுபவத்தை வீடியோவாகப் பதிவேற்றியுள்ளார். வடக்கு-தெற்கு இந்திய கலாச்சாரங்களின் அற்புதமான கலவையாக இத்திருமணம் அமைந்ததாகவும், 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த சடங்குகள், சுவையான சைவ உணவு என பல அம்சங்களைப் புகழ்ந்துரைத்துள்ளார்.

வைரல் வீடியோ
இந்தியாவை (India) பொறுத்தவையிலும் தற்போது மதங்கள், மொழி, இனம் (Religions, language, ethnicity) சார்ந்த திருமணங்கள் (Weddings) நடைமுறையில் சாதாரணமாக இருந்து வருகிறது. மேலும் பல மக்கள் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் எனக் காதல் திருமணம் செய்து வருகின்றனர். இதுபோன்ற விஷயங்கள் நமது தமிழகத்திலும் சகஜமாகிவிட்டது என்றே கூறலாம். அந்த வகையில் பிரபல பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் (British Influencer) ஒருவர் இந்தியத் திருமணத்தில் கலந்துகொண்டு, அவரின் அனுபவங்களை வீடியோவாக பதிவேற்றியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூர் என்ற பகுதியில் நடந்த திருமணத்தில், பிரிட்டிஷ் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் நிக் புக்கர் (Nick Booker) என்பவர் கலந்துகொண்டுள்ளார். அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இந்தியாவின் தெற்கு மற்றும் வடக்கு இணைந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மணமக்கள் திருமணம் மூலம் ஒன்றிணைந்தது குறித்து அவர் பேசியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், இந்தியாவின் தெற்கு மாறும் வடக்கு ஒன்றாகியுள்ளது, மங்களூரில் நடந்த ஷ்ரவ்யா மற்றும் ராஜீவ்வின் திருமணத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். எனது பஞ்சாபி உறவினர்கள் எப்படி திருமணத்தை நடத்தவேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள், இந்த திருமண நிகழ்வானது சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாகவும், அந்த திருமணத்தில் அழகான மற்றும் புனிதமான சடங்குகள் பல நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார்
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
கலிபோர்னியாவில் இருந்து வந்த நிக் புக்கர், இது பஞ்சாபி மற்றும் கர்நாடகா மணமக்கள் இணைந்த திருமணம் என்று கூறியுள்ளார். இந்த திருமண நிகழ்வில் இந்தியாவின், பல மங்கள வாத்தியங்கள், மற்றும் நிகழ்வுகள் நடந்தது. இந்த திருமண சடங்கில் உறவினர்களின் கொண்டாட்டமும் , பெற்றோரின் அழுகையும் எனக்கு மிகவும் வித்திசாசமாக இருந்தது. இதுவரை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக திருமண சடங்குகள் நடக்கும், ஒரு புதுவிதமான திருமணமாக இந்த திருமணத்தைப் பார்க்கிறேன்.
அதிலும் குறிப்பாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை இணைக்கும் விதத்தில் இந்த திருமணம் அமைந்துள்ளது. பஞ்சாப் மற்றும் கர்நாடகா என இரு மாநிலங்களை இணைக்கும் திருமணமாக இது இருந்தது. அதிலும் இந்த திருமணத்தில் நான் மிகவும் வித்தியாசமாகப் பார்த்தது , தவில் அடிக்கும் அவர்கள் கையுறைக்காகப் பலா மரத்தின் தோலைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
மேலும் இந்த திருமணத்தில் சைவ விருந்தாக இருந்தாலும் மிகவும் அருமையாக இருந்தது. அந்த உணவின் ருசியைக் கூறுவதற்கே வார்த்தைகளே இல்லை என்று பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் நிக் புக்கர் தெரிவித்துள்ளார். இவரின் வீடியோவின் கீழ் பல இந்திய மக்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் இந்தியாவின் மற்றொரு பக்கம் இவ்வாறு அழகாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.