Viral Video : ஹெலிகாப்டரை பிடித்து அந்தரத்தில் தொங்கிய இளைஞர்.. பதறிப்போன கூட்டம்.. அடுத்து நடந்தது என்ன?

Man Hanging from Helicopter | சமூக ஊடகங்களின் உதவியால் எந்த இரு அசாத்திய நிகழ்வு அடங்கிய வீடியோவும் இணையத்தில் மிக வேகமாக வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் ஹெலிகாப்டரை பிடித்து நடுவானில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : ஹெலிகாப்டரை பிடித்து அந்தரத்தில் தொங்கிய இளைஞர்.. பதறிப்போன கூட்டம்.. அடுத்து நடந்தது என்ன?

வைரல் வீடியோ

Published: 

19 Apr 2025 21:02 PM

ஆப்ரிக்கா, ஏப்ரல் 19 : இளைஞர் ஒருவர் ஹெலிகாப்டரை (Helicopter) பிடித்து தொங்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஹெலிகாப்டர் தரையில் இருந்து புறப்பட்ட நிலையில், தன்னை அழைத்துச் செல்ல மறுத்ததால் அந்த இளைஞர் இந்த செயலை செய்துள்ளார். அந்த இளைஞரின் செயலை கண்டு அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர். இந்த நிலையில், இளைஞர் ஹெலிகாப்டரை பிடித்து தொங்கியதற்கான உண்மையான காரணம் என்ன, அங்கு நடந்தது என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

ஹெலிகாப்டரை பிடித்து அந்தரத்தில் தொங்கிய இளைஞர்

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் ஹெலிகாப்டரை பிடித்து அந்தரத்தில் தொங்கும் வீடியோ ஓன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்காவின் கென்யா பகுதியில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதாவது 28 வயதாகும் இளைஞர் ஒருவர், அங்கிருக்கும் ஹெலிகாப்டரில் தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த இளைஞர் ஹெலிகாப்டரில் அமர்ந்துக்கொண்டு இருந்த நபர்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர்களும் பணம் தராத நிலையில், அவரால் ஹெலிகாப்டரில் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், ஹெலிகாப்டர் கிளம்பும் வரை காத்திருந்துள்ளார். சரியாக ஹெலிகாப்டர் புறப்பட தயாரான நிலையில், அந்த நபர் ஹெலிகாப்டரின் அடி பகுதியில் இருக்கும் கம்பியை பிடித்து தொங்க தொடங்கியுள்ளர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் புறப்பட்டதும் அந்த நபர் ஹெலிகாப்டரை பிடித்து தொங்கிய நிலையில், அவர் நடுவானில் அந்தரத்தில் தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பைலட் உடனடியாக ஹெலிகாப்டரை காட்டு பகுதியில் தரை இறக்கியுள்ளார். இதனை உணர்ந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால், பொதுமக்களின் உதவியுடன் அவரை கைது செய்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தனக்கு வேண்டியதை போராடியாவது பெற வேண்டும் என அந்த நபர் நினைத்து இந்த செயலை செய்துள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.