Viral Video : கோழி கூடையில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள்.. வைரல் வீடியோ!
Kids Riding in Chicken Coop on Motorcycle | ஆந்திர பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் கோழி கூண்டில் இரண்டு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு ராப் பாடகர் ரோல் ரிடா இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன்களின் (Smartphone) பயன்பாடு அதகரித்து இருப்பது, சமூக ஊடக (Social Media) பயன்பாடு அதிகரித்திருப்பதும் உலகின் எந்த மூலையில் அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான நிகழ்வுகள் நடைபெற்றாலும் அது உலகிற்கு மிக சுலபமாக தெரிய வந்துவிடுகிறது. முன்பெல்லாம் எங்காவது ஏதேனும் நிகழ்வு நடைபெறுகிறது என்றால் அது உலகிற்கு தெரிய வரவே கால தாமதல் ஆகும். ஆனால், தற்போது அந்த கவலை எல்லாம் இல்லை. ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அது மிக விரைவாக உலகிற்கு தெரிய வந்து விடுகிறது. அந்த வகையில் கோழி கூடையில் சிறுவர்கள் அமர வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருசக்கர வாகனத்தில் கோழி கூடையில் அமர வைத்து அழைத்துச் செல்லப்படும் சிறுவர்கள்
தெலுங்கு ராப் பாடகர் (Rap Singer) ஆன ரோல் ரிடா (Roll Rida) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் ஒருவர் இரண்டு சிறுவர்களை கோழி கூடையில் அமர வைத்து அழைத்துச் செல்கிறார். இது தொடர்பான வீடியோவை தான் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், இது இந்தியாவில் மட்டும் தான் சாத்தியம் என்று பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
மகிழ்ச்சியாக அமர்ந்து செல்லும் சிறுவர்கள்
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், சிறுவர்கள் இருவர் கோழியை ஏற்றி செல்லும் கோழி கூடையில் அமர வைத்து அழைத்துச் செல்லப்படுகின்றனர். கடைகளுக்கு கோழிகளை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் கூடை தான் அது. அதில் தான் அந்த நபர் இரண்டு சிறுவர்களை அமர வைத்து அழைத்துச் செல்கிறார். ஆனால், அந்த சிறுவர்களோ எந்த வித பயமும் இல்லாமல் அந்த கூடையில் அமர்ந்துச் செல்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், குழந்தைகளை ஆபத்தான முறையில் அந்த நபர் அழைத்துச் செல்வதாக சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சிலரோ அவர் ஒரு கோழி வியாபாரியாக இருக்க கூடும். தனது தொழிலையும், பிள்ளைகளையும் பாதுகாப்பதால் அவர் இவ்வாறு செய்திருக்க கூடும் என் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.