நியூயார்க்கா இது? நம்ம ஊர் பரவால போல இருக்கே?! வைரலாகும் வீடியோ
New York's Subway Shock: அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஒரு அழகான இடம் என்ற பிம்பம் அனைவரது மனதிலும் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த யூடியூபரின் வீடியோ அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது. அதனை பார்க்கும்போது நம் ஊர் எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

நியூயார்க் சிட்டி
பொதுவாக அமெரிக்காவையும் (America )அமெரிக்கர்களையும் பற்றி நம் மனதில் உயர்வான எண்ணம் இருக்கும். அமெரிக்கர்கள் சுத்தமாவர்கள், பொது இடங்களில் நாகரிகமாக நடந்துகொள்வார்கள் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். வடிவேலு (Vadivelu) காமெடியில் வரும் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போன்றது தான் அமெரிக்கர்கள் குறித்த நம் எண்ணமும். அமெரிக்கர்களும் பல தருணங்களில் அதனை நிரூபித்திருக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் (New York) நகரம் என்றாலே உலகம் முழுவதும் சொர்க்கமாகக் கருதப்படுகிறது. ஹாலிவுட் படங்களில் நியூயார்க் சித்தரிக்கப்படும் விதம் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தியர்களும் நியூயார்க்கிற்குச் சென்று அதன் அழகிய இடங்களை பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் இது நாணயத்தின் ஒரு பக்கம் போன்றது தான்.
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு யூடியூபர் நியூயார்க்கின் சுரங்கப்பாதைகள் எவ்வளவு மோசமாக உள்ளன என்ற உண்மையை தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். டெல்லி யூடியூபர் என்ற பெயரில் இயங்கும் சோலாங்கி ருத்ராகாஷ் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ மூலம் நியூயார்க் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு சுத்தமாக இல்லை என்பதும், நியூயார்க் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதைகள் நம்ம ஊர் தெருக்களை விட மோசமாக இருப்பதும் தெளிவாகிறது. மெட்ரோ ரயில் நிலையம் மனிதக் கழிவுகளால் சூழப்பட்டுள்ளன. அங்கே எலிகள் அதிகம் இருக்கின்றன.
நியூயார்க்கின் உண்மை நிலை
அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ள டெல்லியைச் சேர்ந்த யூடியூபர் லவ் சோலங்கி ருத்ராகாஷ், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீலை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ நியூயார்க்கின் பிரபலமான மெட்ரோ அமைப்பின் அவல நிலையை வெளிப்படுத்துகிறது. அவரது காணொளி, திரைப்படங்களில் பெரும்பாலும் காட்டப்படும் சுத்தமான மற்றும் அதிநவீன காட்சிகளில் இருந்து மிகவும் மாறுபட்ட காட்சிகளைக் காட்டுகிறது. இந்த ரீல் இப்போது வைரலாகிவ வருகிறது. இது சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்திற்கு வழிவகுத்தது.
ருத்ராகாஷ் பகிர்ந்து கொண்ட காட்சிகளில், ரயில் நிலையங்களில் குடிபோதையில் பயணிக்கும் பயணிகள், குப்பைகளால் மூடப்பட்ட பிளாட்பாரங்கள் மற்றும் தண்டவாளங்களில் எலிகள் சுதந்திரமாக ஓடுவதைக் காணலாம். இதில் உச்சகட்டமாக அவரது வீடியோவில் காட்டப்படும் மெட்ரோ நிலையத்தின் தரைகளில் மலம், சிறுநீர் உள்ளிட்ட மனிதக் கழிவுகளும் காணப்படுகிறது. அந்நகரத்தின் சுகாதார மற்ற நிலை வெளிப்படையாகத் தெரிகிறது. சிலர் டிக்கெட் இல்லாமல் மெட்ரோவைப் பயன்படுத்துவதாக அவர் தனது பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.