நாங்கள் நலமுடன் இருக்கிறோம்.. பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வைரலான வீடியோவில் இருக்கும் தம்பதி விளக்கம்!
Couple Mistaken for Victims in Pahalgam Terrorist Attack | பஹல்காம் தாக்குதலில் புதியதாக திருமணமாகி தேன் நிலவுக்கு சென்ற கடற்படை அதிகாரி கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் உயிரிழப்பதற்கு முன்பு தனது மனையியுடன் எடுத்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், அது குறித்து வீடியோவில் இருக்கும் தம்பதியினர் விளக்கம் அளித்துள்ளனர்.

ஜம்மு & காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காமில் (Pahalgam) நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் (Terror Attack) 26 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதில் இந்தியாவை சேர்ந்த கடற்படை அதிகாரியும் (Indian Navy Officer) ஒருவர் ஆவார். அவர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி அவருக்கு அருகே உடைந்துபோய் அமர்ந்திருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வந்தன. இதற்கிடையே, பஹல்காமில் வீடியோ எடுத்த தம்பதி ஒன்றின் வீடியோவும் வைரலானது. அதாவது, பயங்கரவாத தாக்குதலில் கொலை செய்யப்பட்ட கடற்படை அதிகாரி, தான் உயிரிழப்பதற்கு முன்பாக தனது மனைவியுடன் எடுத்த வீடியோ என அது வைரலானது. இந்த நிலையில், அந்த வைரல் வீடியோவில் இருக்கும் தம்பதிகள் தாங்கள் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இணையத்தில் வைரலான வீடியோ
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஒன்று சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் புதியதாக திருமணமாகி தேன் நிலவுக்கு சென்றிருந்த கடற்படை அதிகாரி ஒருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அப்போது உயிரற்று கிடந்த தனது கணவனின் உடல் அருகே அவரது மனைவி உடைந்துபோய் அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி
The 26 yr Navy Officer, Lieutenant Vinay Narwal,who hails from Haryana got married just 6 days ago & was in Kashmir for honeymoon, killed in the Pahalgam terrorist attack.
He served the nation with pride & was shot down in cold blood.
JUST HEARTBREAKING,WE NEED JUSTICE 💔 pic.twitter.com/j0qVYVGhK5
— Desi Girl (@RelatableBae7) April 23, 2025
இதற்கிடையே தபதியினர் இருவர் பஹல்காமில் எடுத்த வீடியோ ஒன்றும் வெளியானது. இந்த வீடியோ கொலை செய்யப்பட்ட கடற்படை வீரர் வினய் நார்வால் தான் உயிரிழப்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோ என வைரலாகி வந்தது. இந்த நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் தம்பதி அது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். அது குறித்து கூறியுள்ள அவர்கள், அந்த வீடியோவில் இருப்பது நாங்கள் தான். நாங்கள் நலமுடன் இருக்கிறோம். பஹல்காம் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட கடற்படை அதிகாரியும் எனது கணவரும் ஒருவர் என தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது என்று அந்த வீடியோவில் இருக்கும் நபரின் மனைவி கூறியுள்ளார்.
நாங்கள் உயிருடன் இருக்கிறோம் – தம்பதி விளக்கம்
View this post on Instagram
தம்பதி விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.