Viral Video: பசையுடன் விளையாடிய நபர்.. ஒட்டிக்கொண்ட உதடுகள்!
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஆபத்தான சவால்களை ஊக்குவிக்கும் வகையில் சில நேரங்களில் அமைந்து விடுகிறது. அந்த வகையில் சூப்பர் க்ளூவை உதட்டில் பூசி, வாயைத் திறக்க முடியாமல் தவிக்கும் ஒருவரின் வீடியோ 8.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இது பலருக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

பசையுடன் விளையாடிய நபர்
சமூக வலைத்தளங்களில் (Social Media) வளர்ச்சி என்பது மாறி வரும் தொழில்நுட்ப மாற்றம் காரணமாக கணிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. பெரியவர் முதல் சிறியவர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றனர். சிலர் இயற்கையான திறமை மூலம் வெளியே தெரிகின்றனர். சிலர் திறமைகளை கற்றுக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ ஆபாசமாக பேசுவது, உடையணிந்து வீடியோ பதிவிடுவது என தரக்குறைவான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதிலும் ஒரு கூட்டம் பேமஸாக வேண்டும் என ஆபத்தான செயல்களில் (Stunt Video) ஈடுபட்டு வீடியோ வெளியிடுவதை தொடர்ச்சியாக கொண்டிருக்கிறது.
இணையத்தில் பேமஸாக வேண்டும் என்ற முயற்சியில், மக்கள் பல்வேறு விதமான சாகசங்களை நிகழ்த்துகிறார்கள். மேலோட்டமாகப் பார்க்க வேடிக்கையாகத் தோன்றினாலும், ஒவ்வொரு சாகச முயற்சிக்குப் பின் அதற்கான பாசிட்டிவ், நெகட்டிவ் விளைவுகள் உள்ளது. அப்படியாக ஒரு நபர் தனது உதடுகளில் சூப்பர் க்ளூ (Super Glue) எனப்படும் பசையை ஒட்டுவதாக காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பசையால் அவரது வாய் திறக்க முடியாமல் போய் விடும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ 8.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
‘பாடிஸ் டிவி’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோவில், ஒரு கடையில் கையில் சூப்பர் க்ளூ பசையுடன் அமர்ந்திருக்கும் ஒரு மனிதர் காட்டப்படுகிறார். பின்னர் அவர் தனது உதடுகளில் அந்த பசையைப் பூசி உதடுகளை ஒன்றாக இணைக்கிறார். சில நொடிகளில் அவரது உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கிறது. அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும் எவ்வளவோ முயற்சி செய்தும் உதடுகளை அவரால் திறக்கவே முடியவில்லை.
மக்கள் கேட்பதாக இல்லை
ஆரம்பத்தில், விளம்பரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல பசை பற்றிய தகவல் உண்மை இல்லை என்று நினைத்து பசையை பூசியதும் சிரிக்க தொடங்குகிறான். ஆனால் அவன் வாயைத் திறக்க முயற்சிக்கும்போது, அவன் உதடுகள் மூடியபடி உள்ளது. இதனைக் கண்டு அந்த நபர் துயரத்திலும் பீதியிலும் இருப்பதைக் காண முடிகிறது. அவன் வாயைத் திறக்க எடுக்கும் முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போகிறது.
உண்மையில் சந்தைகளில் விற்கப்படும் பசைகள் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தாலும் நம் மக்கள் கேட்பதாக இல்லை. அதனை கை விரல்களில் தடவிக்கொண்டு ஒட்டிப்பார்க்கிறார்கள். பின்னர் அதனை பிரிக்கும்போது சருமத்தில் காயமானது உண்டாகிறது.
இந்த காணொளி மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், பல இணையவாசிகள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர், “நிச்சயம் பசையின் முடிவைக் கண்டு அந்த நபர் நொந்து போயிருப்பார்” என்று தெரிவித்தார். மற்றொருவர், “ஏன் கண்களில் ஒட்டிக்கொள்ள வேண்டியது தானே?” என கோபத்துடன் தெரிவித்திருக்கிறார்.
நாம் என்றைக்கும் பசையுடன் விளையாடக்கூடாது. அவர் இச்சம்பவம் மூலம் பாடம் கற்றுக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். ஏனென்றால் இது மிகவும் மோசமாக இருந்திருக்கும்” என இன்னொருவர் கூறியுள்ளார். வேடிக்கைக்காக விபரீத முயற்சிகள் செய்வது வாடிக்கையாக இருக்கலாம், ஆனால் வீடியோவில் உள்ளதைப் போல கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதுபோன்ற எதையும் முயற்சிக்க வேண்டாம் என பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.