Viral Video : நான் யாருனு கண்டுபிடிங்க பாப்போம்.. ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண்!
Haldi Ceremony Surprise : மணப்பெண் டைனோசர் உடையணிந்து ஹல்தி விழாவில் ஆச்சரியப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில், மணப்பெண் நடனமாடியபடி மணமகனை அணுகும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது திருமண கொண்டாட்டங்களில் புதிய யோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது. மணமக்களின் தனித்துவமான கொண்டாட்டம் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் திருமண விழா (Wedding ceremony in North India) என்றால் அதில் முக்கியமான நிகழ்ச்சியாக இருப்பது ஹல்தி விழா (Haldi ceremony ). இந்த விழா தற்போது ஆள் ஓவர் இந்தியா முழுவதும் சகஜமாக நடந்து வருகிறது. தற்போதுள்ள காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதையே வித்தியாச வித்தியாசமாகச் செய்து வருகின்றனர். மணமக்கள் (Bride and groom) புது உரைகளுடன் திருமண விழாவைக் கொண்டாடுவது உண்டு. ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ ஒன்றில் மணப்பெண் ஹல்தி விழாவிற்கு டைனோசர் உடை அணிந்து வந்துள்ளார். அவர் மணமகனை சர்ப்ரைஸ் செய்யும் விதத்தில் இந்த உடையணிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஹல்தி விழாவில் மணப்பெண் டைனோசர் உடையணிந்து க்யூட்டான நடனத்துடன், மணமகனை நோக்கி வந்த காட்சியானது இணையவாசிகளிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் இப்படி எல்லாம் மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாமா எனப் பலருக்கும் புதிய யோசனையும் தோன்றியுள்ளது. இந்த வீடியோவானது பார்க்கச் சாதாரணமாக இருந்தாலும் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் மணப்பெண் செய்த இந்த சம்பவமானது பலரையும் கவர்ந்து வருகிறது. தற்போது இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வைரலாகும் வீடியோவை நீங்களே பாருங்கள்.
இணையத்தில் நெட்டிசன்களை கவர்ந்த அந்த வீடியோ :
View this post on Instagram
இந்த வீடியோவில், மணப்பெண் ஒருவர் டைனோசர் உடையணிந்து ஹல்தி விழாவிற்கு வருகிறார். அதுவும் அவர் சாதாரணமாக வரவில்லை, சிறு சிறு அசைவுடன் நடனமாடியபடியே மணமகனை நோக்கி வந்துள்ளார். ஆரம்பத்தில் ஆச்சரியமாகப் பார்த்த மணமகன் இது யார் என்று யோசித்துப்பார் போல,பின் அடையாளம் கண்ட அவர் பாசத்தில் அணைத்துக்கொண்டார். டைனோசர் வேடமிட்டு அவர்கள் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர்.
சமீபகாலமாகத் திருமண விழாக்களை மக்கள் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடி வருகின்றனர். திருமணத்தைத் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பு இருந்தேன் இந்த கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகிறது. ஹல்தி, சங்கீத், பேச்சுலர் பார்ட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் திருமணங்களைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த விழாக்கள் நடத்துவதற்காகவாவது அவர்கள் அதிகம் சம்பாதிக்கவேண்டும். அந்த அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாகச் சாதாரணம் மக்களே கொண்டாடி வருகின்றனர். தற்போது டைனோசர் உடையணிந்து நடனமாடிய தம்பதிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவின் கீழ் இணையவாசிகள் கருத்துக்கள் :
இந்த வீடியோவானது சுமார் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர் ” திருமண விழாவில் இதுபோன்ற சிறிய சிறிய சர்ப்ரைஸ் வாழ்க்கை மொத்தத்தையும் அழகாக்கும் என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “நானும் முதலில் இந்த டினோசர் உடையணிந்து வந்தவர் அவரின் எக்ஸ் காதலி என்று நினைத்தேன். நல்ல வேளை என்று இரண்டாவது நபரும் கூறியுள்ளார்.