Viral Video : மனிதர்களை போலவே பேசும் காகம்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
Maharashtra Talking Crow | மகாராஷ்டிராவில் அச்சு அசல் மனிதர்களை போலவே பேசும் காகத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகில் வாழும் உயிர்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது மனித இனம் தான். காரணம் மனிதர்களுக்கு பகுத்தவறி, பேசும் திறன் உள்ளிட்டவை உள்ளன. இவை எல்லாம் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் இல்லை. இதன் காரணமாக தான் மனித 6 அறிவு கொண்டவனாக உள்ளான். பறவைகள், விலங்குகளால் பேச முடியாது என்பதுதான் பெரும்பாலானவர்களின் கூற்றாக உள்ளது.
ஆனால், காகம் ஒன்று மனிதர்களை போலவே பேசுகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா. பொதுவாக கிளிகள் தான் மனிதர்களை போல பேசும் என கூறுவார்கள். அவ்வாறு கிளிகள் பேசும் வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக உள்ளன. ஆனால், மகாராஷ்டிராவில் காகம் ஒன்று மனிதர்களை போல பேசுகிறது. அந்த காகம் மராத்தி மொழியில் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனிதர்களை போல பேசும் காகம்
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியை சேர்ந்தவர் தனுஜா. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காயமடைந்து கிடந்த காகம் ஒன்றை தனது வீட்டிற்கு எடுத்து வந்து சிகிச்சை அளித்து வளர்த்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இயல்பாக இருந்த காகம் நாளடைவில் மனிதர்களை போல பேச தொடங்கியுள்ளது. அந்த காகம் மெல்ல மெல்ல மராத்தி வார்த்தைகளை கற்றுக்கொண்டுள்ளது.
மராத்தி குடும்பத்தில் வளர்க்கப்பட்டதன் காரணமாக அந்த காகம் மராத்தி வார்த்தைகளை பேச தொடங்கியுள்ளது. அதன்படிம் காகா, பாபா, மம்மி உள்ளிட்ட வார்த்தைகளை அந்த காகம் பேச தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் அந்த காகம் பாபா, காகா என கத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
வைரல் வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள்
இந்த வீடியோ மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்க்கும் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து கூறியுள்ள ஒருவர், இது நிச்சயம் காகத்தின் குரலாக இருக்காது. இது செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட வீடியோவாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால், சிலரோ காகம் அப்படியே மனிதர்களை போல பேசுவதாக வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.