Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உணவை வாங்காத வாடிக்கையாளர் – டெலிவரி ஊழியருக்கு ஜொமேட்டோ மறைமுக சலுகை ?

உணவு டெலிவரி செய்ய சென்றபோது அதை ஆர்டர் செய்தவர் வாங்கவில்லை எனறும் பலமுறை முயன்றும் ஆர்டர் செய்தவர் அவரிடம் இருந்து உணவை வாங்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் ஜொமேட்டோ அதனை டெலிவர்டு என குறிப்பிட சொன்னதாம். அதாவது உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டது என குறிப்பிட சொல்லியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

உணவை வாங்காத வாடிக்கையாளர் – டெலிவரி ஊழியருக்கு ஜொமேட்டோ மறைமுக சலுகை ?
டெலிவரி ஊழியருக்கு ஜொமேட்டோ மறைமுக சலுகை
karthikeyan-s
Karthikeyan S | Published: 22 Mar 2025 08:35 AM

பேஸ்புக்கில் (Facebook) சமூக ஆர்வலர் கிரண் வெர்மா என்பவர் கடந்த மார்ச் 14, 2025 அன்று பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். புனேவில்(Pune) தனது காரை பார்க் செய்ய நிறுத்தும்போது, ஒருவர் பைக்கில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவர் கார் நிறுத்த வேறு இடம் இல்லாததால் அவர் சாப்பிடும் வரை வெர்மா காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. அவர் உணவு டெலிவரி (Food Delivery) செய்பவர் என்பதால் வெர்மாவுக்கு டெலிவரி செய்ய வேண்டிய உணவை சாப்பிடுகிறாரோ? என சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து அவர் சாப்பிடுவைத போட்டோ எடுத்திருக்கிறார். பின்பு பைக்கில் சாப்பிட்டுக்கொண்டிருப்பவரை அணுகி தான் காரை நிறுத்த வேண்டும் என்பதால் எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டிருக்கிறார்.

ஜொமேட்டோ ஊழியர்களுக்கு வழங்கும் சலுகை

பின்னர் அவரிடம் பேச்சுக்கொடுத்த போது டெலிவரி செய்பவர் சொன்ன தகவல் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தயிருக்கிறது. தான் உணவு டெலிவரி செய்ய சென்றபோது அதை ஆர்டர் செய்தவர் வாங்கவில்லை எனறும் பலமுறை முயன்றும் ஆர்டர் செய்தவர் அவரிடம் இருந்து உணவை வாங்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் ஜொமேட்டோ அதனை டெலிவர்டு என குறிப்பிட சொன்னதாம். அதாவது உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டது என குறிப்பிட சொல்லியிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் நிறுவனத்துக்கு கூடுதலாக கேட்கப்படும் ஆபரேஷனல் சார்ஜஸை குறைக்க அவ்வாறு செய்வதாக அவர் குறிப்பிட்டார். மேலும் அப்படி செய்ய வில்லை என்றால் உணவை டெலிவரி செய்பவருக்கான பணம் வழங்கப்படாது. அவர் அப்படி செய்த பின் அந்த உணவை தூக்கி குப்பையில் போடலாம் அல்லது அவரே எடுத்துக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த முறை சரியானதா என கேள்வி எழுப்ப தோன்றினாலும் உணவை டெலிவரி செய்பவருக்கு அவரது உழைப்புக்கு பணம் கிடைக்கிறது. மேலும் உணவு வீணாவதும் குறைகிறது. இப்படி வாடிக்கையாளர்களால் வாங்கப்படாத உணவுகளை அவர்கள் சாப்பிடும்போது உணவுக்கான செலவும் சிறிது குறையும் என வெர்மா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டெலிவரி ஊழியர்களின் அனுபவம்:

ஹோலி போன்ற பண்டிகைகளின்போது அவர்கள் செய்யும் ஒவ்வொரு கூடுதல் உணவு டெலிவரிக்கும் கூடுதலாக ஜொமேட்டோ பணம் வழங்குகிறது. உணவு டெலிவரி செய்பவருக்கு ஒரு டெலிவரிக்கு ரூ.10 முதல் ரூ.25 வரை மட்டுமே கிடைக்கிறது. மாதம் அவருக்கு ரூ20,000 முதல் 25,000 வரை கிடைக்கும். இந்த உணவு டெலிவரி செய்பவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். அவருக்கு விவசாயியான அப்பாவும், இரண்டு சகோதரர்களும் இருக்கிறார்கள். அதன் காரணமாக அவருக்கு ஒவ்வொரு உணவு மிக முக்கியம் என தனது பதிவில் வெர்மா தெரிவித்துள்ளார்.

ஏதோ ஒரு வகையில் ஜொமேட்டோ நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கை டெலிவரி ஊழியர்களுக்கு நன்மையையே ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இத்தகைய நிகழ்வுகள் உணவு டெலிபவரி செய்பவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் நலன் ஆகியவை குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. அரசு மற்றும் நிறுவனங்கள் இணைந்து, டெலிவரி பணியாளர்களின் வேலைக்கான பலன் மற்றும் நலன்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

ஜொமெட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) தீபிந்தர் கோயல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, சாதாரண டெலிவரி பணியாளராக, டி-ஷர்ட் அணிந்து உணவுகளை டெலிவரி செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகளும் வெளியாகின. இது வாடிக்கையாளர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்பவர்களின் தேவைகள் மற்றும் பிரச்னைகளை நேரடியாக அறிந்து கொள்ள அவர் இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. மேலும் உணவு டெலிவரி செய்யும் பெண்களுக்கான சீருடையை மறுசீரமைத்து, குர்தாக்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இது பெண்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும்.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...