இந்தியருக்கு ரூ.8000 டிப்ஸ் கொடுத்த பாகிஸ்தான் நபர் – எதுக்காக தெரியுமா?
ஊபர் ஈட்ஸ்க்காக டெலிவரி பாயாக பணி செய்யும் நவநீத், தினமும் நீண்ட நேரம் வெயில், மழை, பனி என எதையும் பொருட்படுத்தாமல் வேலை செய்திருக்கிறார். பல நேரம் பின்னிரவு வரை கூட வேலை செய்திருக்கிறார். அவரது கனவை நிறைவேற்ற குடும்பத்தை விட்டு கனடாவில் தனியாக தங்கி கஷ்டப்பட்டு வேலை செய்து வருகிறார். உணவு டெலிவரி செய்யும் நேரம் போக, முடி வெட்டும் தொழிலாளராக பணியாற்றுகிறாராம்.

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்
கனடாவில் (Canada) வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த ஹம்சா அசீஸ் ஊபர் ஈட்ஸ் செயலியின் மூலம் பீட்சா ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது அவருக்கு உணவு டெலிவரி செய்த நபர் பீட்சாவுக்கு பதிலாக வேறு உணவு வழங்கப்பட்டிருக்கிறது. அசீஸ் அவரிடம் கோபப்படாமல், நீங்கள் அளித்தது நான் ஆர்டர் செய்த உணவு இல்லை என விளக்கியிருக்கிறார். அதற்கு உணவு டெலிவரி செய்த நபர் எந்த தயக்கமும் இல்லாமல், 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருங்கள். நான் கடைக்கு சென்று நடந்த தவறை சரி செய்ய முயற்சிக்கிறேன் என்றிருக்கிறார். இந்த நேரத்தில் யாருக்காக இருந்தாலும் கோபம் வந்திருக்கும். ஆனால் ஹம்சா அவரைப் பற்றி கேட்டிருக்கிறார். பஞ்சாப்பை (Punjab) சேர்ந்த இந்தியரான அவர், எனக்கு முடி திருத்தும் தொழில் செய்ய ஆசை. முடி திருத்தும் கடை வைக்க ஆசைப்படுகிறேன். அதற்காக இப்போது பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறேன் என்றிருக்கிறார்.
ஊபர் ஈட்ஸ்க்காக டெலிவரி பாயாக பணி செய்யும் நவநீத், தினமும் நீண்ட நேரம் வெயில், மழை, பனி என எதையும் பொருட்படுத்தாமல் வேலை செய்திருக்கிறார். பல நேரம் பின்னிரவு வரை கூட வேலை செய்திருக்கிறார். அவரது கனவை நிறைவேற்ற குடும்பத்தை விட்டு கனடாவில் தனியாக தங்கி கஷ்டப்பட்டு வேலை செய்து வருகிறார். உணவு டெலிவரி செய்யும் நேரம் போக, முடி வெட்டும் தொழிலாளராக பணியாற்றுகிறாராம்.
பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஹம்சாவின் சிறிய உதவி
இதனைக் கேட்ட ஹம்சா அவருக்கு 100 டாலர்கள் டிப்ஸ் அளித்திருக்கிறார். இது ஹம்சாவின் செயல் நவநீத்திற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. யூடியூபரான ஹம்சா இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவில், இந்தியாவின் பஞ்சாபில் இருந்து கனடாவிற்கு வந்த மாணவர் நவநீத், ஒரு முழுநேர Uber Eats டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். நவநீத்தின் உண்மையான ஆர்வம் உணவு டெலிவரி அல்ல, ஹேர் கட் செய்வது தான்.
வேலைநேரம் போக தனது ஓய்வு நேரத்தில் மிகுந்த அக்கறையோடு,முடி வெட்டும் கலையை பயிற்சி செய்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு வைரலான நிலையில் நவநீத்தின் முயற்சி ஐகானிக் மென் குரூம் என்ற நிறுவனத்தின் கவனத்தை பெற்றது, அவர்கள் தங்களது நிறுவனத்தில் முடிவெட்டும் பயிற்சி அளிக்க சேர அனுமதி கொடுத்தனர். அங்கே நவ்நீத் புதிய முடிவெட்டும் கருவிகள் குறித்து பயிற்சி பெற்றார்.
நவநீத்தின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மை
இந்த நிலையில் நன்றி சொல்வதற்காக, அவர் என்னை தனது வீட்டிற்குள் அழைத்து எனக்கு ஹேர்கட் செய்தார். அப்போது, நவ்நீத் தனது இந்தியாவில் இருக்கும் குடும்பத்தை பற்றியும், அவர்களை 4 வருடங்களாகப் பார்க்கவில்லை என்ற வருத்தத்தையும் பகிர்ந்தார். ஒருவரது கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் சமூகத்தின் ஆதரவு இருந்தால் ஒருவர் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை நவநீத்தின் பயணம் நினைவூட்டுகிறது. நீங்கள் உங்கள் ஆர்வத்தை பின்தொடர்ந்தால், எதுவும் சாதிக்க முடியும். நவ்நீத் போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேற உதவுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.