Viral News : உலகிலேயே பெரிய அனகோண்டா… இத்தனை கிலோ எடை கொண்டதா?
Eunectus Acaima Giant Anaconda : 2024 ஆம் ஆண்டில், அமேசான் காடுகளில் புதிய வகை பெரிய அனகோண்டா கண்டுபிடிக்கப்பட்டது. யூனெக்டஸ் அகாய்மா எனப் பெயரிடப்பட்ட இந்த நார்த் க்ரீன் அனகோண்டா, சுமார் 7.5 மீட்டர் நீளமும் 500 கிலோ எடையும் கொண்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய அனகோண்டா இது தான். ஈக்வடார் அமேசானில் உள்ள பைஹுவேரி வௌரானி பகுதியில் உள்ள பழங்குடி மக்களின் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்பட்டது.

நார்த் க்ரீன் அனகோண்டா
உலகிலே மிக பெரிய ஊர்வனங்களில் (Reptile) ஒன்றாக இருப்பது, அனகோண்டாக்கள் (Anacondas) என்று கூறப்படுகிறது. மேலும் அனகோண்டாக்கள் என்றாலே நமக்குப் பயம்தான், பொதுவாகப் பாம்பைக் ( Snake) கண்டால் படையே நடுக்கும் என்று தமிழில் கூறுவதுண்டு. ஆனால் நம்மைவிட மிகவும் பெரிய பாம்பைக் கண்டால் நமது உயிர் கையிலே இருக்காது. கடந்த 2024ம் ஆண்டு விஞ்ஞானிகள் அமேசான் காடுகளில் (Amazon forest) புதிய உயிரினங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் அவர்களின் கண்ணில் மிக பிரம்மாண்டமான ராட்சச அனகோண்டா தென்பட்டுள்ளது. இந்த அனகோண்டாவை அவர்கள் “யூனெக்டஸ் அகாய்மா” (Eunectus acaima) என்று அழைக்கப்படுகிறது. இந்த நார்த் க்ரீன் அனகோண்டாதான் (Northern green anaconda) உலகிலே மிகவும் பெரிய உயிருள்ள பாம்பு என்று கூறுகின்றனர்.
இந்த பாம்பானது சுமார் 7.5 மீட்டர் வரை வளரக்கூடியதாம். இந்த நார்த் க்ரீன் அனகோண்டா சுமார் 500 கிலோ கிராம் எடை கொண்டதாம். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்புகளில் அமேசான் காட்டில் உள்ள இந்த நார்த் க்ரீன் அனகோண்டாதான் உலகிலே மிகப் பெரிய உயிருள்ள அனகோண்டா என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பிரம்மாண்ட பச்சை அனகோண்டா :
இந்த நார்த் க்ரீன் அனகோண்டாவைக் கண்டு பிடிப்பதற்கு முன், க்ரீன் அனகோண்டா “யூனெக்டஸ் முரினஸ்தான்” உலகிலே உயிருள்ள மிகவும் பெரிய அனகோண்டா என்று கூறப்பட்டு வந்தது. இதற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட நார்த் க்ரீன் அனகோண்டா “யூனெக்டஸ் அகாய்மாதான்” உலகிலே மிகவும் பெரிய உயிருள்ள அனகோண்டா என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
நார்த் க்ரீன் அனகோண்டா எங்கே கண்டுக்கிடிக்கப்பட்டது?
இந்த அனகோண்டாவானது முதன்முதலில் கடந்த, 2024 ஆம் ஆண்டு ஈக்வடார் அமேசானுக்குள் ஆழமாக அமைந்துள்ள பைஹுவேரி வௌரானி பிரதேசத்தின் பமெனோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப் பழங்குடி மக்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த அனகோண்டா முற்றிலும் புதிய இனத்தைச் சேர்ந்தவை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
நார்த் க்ரீன் அனகோண்டாவின் உணவு
இந்த அனகோண்டா மான்கள் மற்றும் சிறுத்தைகளைக் கூட வீழ்த்தும் திறன் கொண்டவை. அவற்றின் வேட்டை திறன், முழு வலிமை மற்றும் மின்னல் வேக அனிச்சைகளை இரையை எளிமையாக வீழ்த்துகிறது. இந்த நார்த் க்ரீன் அனகோண்டா சேற்று நீரில் பதுங்கியிருந்து, இரையைப் பதுங்கியிருந்து தாக்குவதற்கு முன்பு பொறுமையாகக் காத்திருந்து இரையை வேட்டையாடும் திறன் கொண்டவை. இந்த நார்த் க்ரீன் அனகோண்டாதான் தற்போது உலகிலே வாழும் மிகவும் பெரிய பாம்பு வைகையில் ஒன்றாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிணாமப் பிளவு :
இந்த அனகோண்டாக்கள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், உலகின் தெற்கு பகுதிகளில் வாழ்த்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் விஞ்ஞானிகள் இந்த நார்த் க்ரீன் அனகோண்டாவானது இரண்டு இனங்களுக்கிடையேயான மரபணு வேறுபாட்டைக் கண்டறிந்துள்ளனர். மனிதர்களுக்கும், குரங்குகளுக்கும் டிஎன்ஏ வேறுபாடு இருப்பதுபோல என்று கூறப்படுகிறது. தற்போது இந்த அனகோண்டாவைப் பாதுகாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.