வானில் தோன்றிய அதிசய வெளிச்சம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Mysterious Colorful Lights in Night Sky | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் வானத்தில் மிகவும் ஆச்சர்யமூட்டும் வண்ணங்கள் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வானில் தோன்றிய அதிசய வெளிச்சம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

18 Apr 2025 13:22 PM

உலகில் கோடிக்கணக்கான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பூமியில் இன்னும் ஏராளமான அதிசயங்கள் உள்ள நிலையில், அவற்றை கண்டு பிடிப்பதற்காக விஞ்ஞானிகள் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், பல விஷயங்களுக்கு இன்னும் விடை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளன. உலகின் மிகவும் வியப்பூட்டும் விஷயமாக உள்ளது வானம் தான். வானத்தில் என்ன என்ன இருக்கிறது, மனிதர்களை போலவே வேறு ஏதேனும் உயிரினங்கள் உள்ளதா, பூமியை போலவே உயிர்கள் வாழும் சாத்தியக்கூறுகளை கொண்ட வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா என்பதை குறித்து எல்லாம் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வானில் வண்ண விலக்குகள் மின்னும் வீடியோ ஒன்று வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வானில் தோன்றிய அதிசய வெளிச்சம் – ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்

கனடாவில் வானில் திடீரென தோன்றிய வெளிச்சத்தை கண்டு பொதுமக்கள் மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளாகியுள்ளனர். இரவு நேரத்தில் வானில் பந்து வடிவிலான வண்ணங்கள் தெரிய தொடங்கியுள்ளது. அது மெல்ல மெல்ல மேகங்களுக்கு இடையில் நகர்ந்து செல்கிறது. அந்த ஒளி பச்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட நிரங்களை கொண்டுள்ளது. இதுவரை பார்த்திராத வித்தியாசமான மற்றும் வியப்பூட்டிம் நிகழ்வாக அது உள்ளது. இந்த வீடியோவை பதிவு செய்த நபர்கள் அதனை கண்டு ஆச்சர்யமடைவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

வானில் தோன்றிய இந்த வெளிச்சம் UFO (Unidentified Flying Object) வாக கருதப்படுகிறது. அதாவது அடையாளம் காணப்படாதா பறக்கும் பொருள் என்று இதற்கு அர்த்தம். மிகவும் அரிய நிகழ்வு இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அது ஒருசில மணி நேரத்திலே மில்லியன் கணக்கான பார்வைகளை கொண்டு மிக வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது ஏலியன்கள் மனிதர்களிடம் இருந்து மறைந்து வாழ வேண்டும் என நினைத்தால் அவை ஏன் இப்படி வண்ண விளக்குகளுடன் உலா வர போகின்றன என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வின் மூலம் உலகம் நமக்கு எதையோ சொல்ல வருகிறது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories