காருக்கு பின்னால் தொங்கிய மனித கை.. மும்பையை பதர வைத்த சம்பவம்!

Human Hand Hanging from Car Sparks Investigation | நவி மும்பை பகுதியில் சாலையில் சென்ற காரின் பின் பகுதியில் மனித கை தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், போலீசார் அது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

காருக்கு பின்னால் தொங்கிய மனித கை.. மும்பையை பதர வைத்த சம்பவம்!

வைரல் வீடியோ

Published: 

17 Apr 2025 14:09 PM

மும்பை, ஏப்ரல் 17 : மும்பையில் (Mumbai) காரின் பின்பக்கத்தில் மனித கை தொங்கியபடி சாலையில் சென்ற காரால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதனை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் (Social Medias) பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ இணையத்தில் மிகவும் வேகமாக வைரலாகி (Viral) வருகிறது. இந்த நிலையில், காரின் பின் பக்கம் தொங்கியபடி சென்ற கை உண்மையானதா, இந்த விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில் எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலையில் சென்ற காரில் தொங்கிக்கொண்டு இருந்த மனித கை?

மகாராஷ்டிரா மாநிலம் , நவி மும்பையில் உள்ள வஷி பகுதியில் சாலையில் சென்ற ஒரு காரின் பின் பக்கத்தில், Boot என்று அழைக்கப்படும் பகுதியில் மனித கை ஒன்று தொங்கிக்கொண்டு இருதுள்ளது. இதனை அந்த காரின் பின் இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில், அது ஒரு மனித கை என வீடியோ எடுக்கும் நபர்கள் கூறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தான் இணையத்தில் தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

பட்டப்பகலில் சாலையில் சென்ற காரில் இருந்து மனித கை தொங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இது கொலை சம்பவமா அல்லது ஏதேனும் ஆட்கடத்தல் விவகாரமா என்பது குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். அப்போது தான் இந்த விவகாரம் தொடர்பான முக்கிய தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

விசாரணையில் வெளியான உண்மை

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஒரு லேப்டாப் கடைக்கு விளம்பரம் செய்யும் வகையில் மூன்று இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர். அதிர்ச்சியான ஒரு சூழலை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களின் கவனத்தை பெறுவதற்காக அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

விளக்கமளித்த நவி மும்பை போலீஸ்

இந்த நிலையில், நவி மும்பை போலீசார் இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கம் அளித்து தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories