Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர் – வைரலாகும் வீடியோ

Assault in Government Hospital: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த முதியவரை அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தர தரவென இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மருத்துவர் தற்போது பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர் – வைரலாகும் வீடியோ
முதியவரை இழுத்து செல்லும் மருத்துவர்
karthikeyan-s
Karthikeyan S | Published: 20 Apr 2025 23:25 PM

மத்திய பிரதேசம் (Madhya Pradesh) மாநிலம் சத்தர்பூர் பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் (Government Hospital) கடந்த ஏப்ரல் 17, 2025 அன்று 77 வயது முதியவர் ஒருவரை மருத்துவர் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உதவ்லால் ஜோஷி என்ற 77 வயது முதியவர் தனது உடல்நிலை சரியில்லாத மனைவியை, சத்தர்பூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்திருக்கிறார். அப்போது மருத்துவரை பார்க்க நீண்ட வரிசையில் காத்திருந்திருக்கின்றனர். அப்போது ராஜேஷ் மிஷ்ரா என்ற மருத்துவர் முதியவரையும் அவரது மனைவியையும் அங்கிருந்து போக சொன்னதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதியவர் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது மருத்துவர் முதியவரை கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

பின்பு பெரியவரை மருத்துவர் தர தரவென இழுத்து சென்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய முதியவர் ஜோஷி, அந்த டாக்டர் என்னை அடித்து உதைத்தார். பின் என் கண் கண்ணாடியை உடைத்தார். என் மனைவி மீதும் தாக்குதல் நடத்தினார் என பத்திரிகையாளர்கள் முன்பு தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து மருத்துவர் ராஜேஷ் மிஷ்ராவும் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் பேசியதாவது, அந்த முதியவர் லைனில் நிற்கும் போது முறையற்ற முறையில் நடந்து கொண்டார். மேலும் அவரது முன்னாள் இருந்த ஒரு பெண் மீது தவறாக நடந்து கொண்டார். மருத்துவமனை ஊழியர்களிடமும் பிரச்னையில் ஈடுபட்டார் என தன் தரப்பு நியாயத்தை பதிவு செய்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் முதலில் மருத்துவருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்பு இந்த வீடியோ வைரலான நிலையில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற மருத்துவர்

 

துணை முதல்வர் விளக்கம்

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அந்த மருத்துவரை பணியில் இருந்து சஸ்பென்ட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நோயாளிகளின் உணர்வுகளை மதித்து, மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அணுகுவது அரசு மருத்துவமனைகளின் அடிப்படை குறிக்கோளாக இருக்க வேண்டும் என அரசு கருதுகிறது. இவ்வகையான சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த காலங்களில் பல்வேறு மருத்துவ அலட்சிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,  ஒரு பெண் கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்தார்; அந்தக் குழந்தை பிறந்தவுடன் உயிரிழந்தது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பாக இருந்த நர்சிங் அதிகாரி ப்ரீத்தி பிரஜாபதி இடைநீக்கம் செய்யப்பட்டார் .​ இந்த சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...