Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு வருடமாக ரயிலில் இலவசமாக பயணிக்கும் நபர் – என்ன ஒரு புத்திசாலித்தனம்!

இளைஞர் ஒருவர் டிக்கெட்டே எடுக்காமல் ஒரு வருடமாக இலவசமாக பயணித்துவந்திருக்கிறார். இதன் மூலம் அவர் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக சேமித்திருக்கிறார். இது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிந்திருந்தும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையாம்.

ஒரு வருடமாக ரயிலில் இலவசமாக பயணிக்கும் நபர் – என்ன ஒரு புத்திசாலித்தனம்!
ரயில் நிலையம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 28 Mar 2025 05:01 AM

இந்தியாவில் மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் ரயில் (Train) மட்டும் தான் எளிய மக்களுக்கான பயண ஆதாரமாக இருந்து வருகிறது. மேலும் பேருந்து, விமானம் (Flight) போன்ற முறைகளைக் காட்டிலும் ரயிலில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவது ஒரு காரணம். மேலும் மற்ற பயண முறைகளை காட்டிலும் ரயில் மூலம் விரைவாக பயணிக்க முடியும். மேலும் நீண்ட நேர பயணங்களுக்கு பெரும்பாலானோர் ரயிலையே பயன்படுத்துகின்றனர். ரயில் பயணம் பாதுகாப்பானதாக இருக்கிறது. ரயில் மூலம் இந்தியாவின் எல்லா மூலைகளுக்கும் செல்ல முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஆனால் அதில் டிக்கெட் (Train Ticket) கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயமாக மாறி வருகிறது. குறிப்பாக அவசர காலத்தில் ரயிலில் பயணிக்க முடியாது என்பது அதில் இருக்கும் முக்கிய பிரச்னை.

ஒரு வருடமாக ரயிலில் இலவசமாக பயணித்த நபர்

இந்த நிலையில் இளைஞர் ஒருவர் டிக்கெட்டே எடுக்காமல் ஒரு வருடமாக இலவசமாக பயணித்துவந்திருக்கிறார். இதன் மூலம் அவர் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக சேமித்திருக்கிறார். இது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிந்திருந்தும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையாம்.

பிரிட்டனை சேர்ந்த எட் வைஸ் என்ற 29 வயது நபர் ரயில்கள் வந்து செல்லும் நேரங்களை நீண்ட காலமாக ஆய்வு செய்திருக்கிறார். குறிப்பாக அது எவ்வளவு நேரம் தாமதமாக வருகின்றன என கவனதித்திருக்கிறார். பெரும்பாலான நேரங்கள் தாமதமாக வருவதை கவனித்த அவர் அதற்கேற்ப டிக்கெட் எடுத்திருக்கிறார். அங்கே தாமதமாக ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தால் முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும். இதனை பயன்படுத்தி கடந்த ஒரு வருடமாக ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக சேமித்திருக்கிறார்.

இங்கிலாந்தின் விதிமுறைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திய இளைஞர்

இங்கிலாந்தில் ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால் 25 சதவிகிதம் பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும், அரை மணி நேரம் தாமதமாக வந்தால் 50 சதவிகிதம் பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும், 1 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்தால் முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றும் விதிமுறை இருக்கிறது. வேலை நிறுத்தம், பராமரிப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக ரயில் தாமதமாக வந்திருக்கிறது. இதனை கவனித்து அவர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். எட் வைஸ் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறாராம். முறையாக திட்டமிட்டால் பயணத்துக்கு செலவிடும் பணத்தை சேமிக்கலாம் என்கிறார்.

இந்தியாவில் ரயில் தாமதமாக வந்தால் இந்த மாதிரி பணம் திருப்பி கொடுக்கும் நடைமுறை இல்லை.
இந்தியாவில் ஒரு இலவச ரயில் இருக்கிறது. இந்த ரயிலானது பஞ்சாப் மாநிலத்தின் நங்கல் தொடங்கி இமாச்சல பிரதேசத்தின் பக்ரா வரை 13 கி.மி பயணிக்கிறது. இந்த டிரெயின் 75 ஆண்டுகளாக இந்தியாவில் இலவச சேவை வழங்கிவருவதாக கூறப்படுகிறது. அந்த ரயிலில் வெறும் 3 பெட்டிகள் மட்டு இருக்கிறது. இந்த ரயில் சேவையானது பக்ரா நங்கல் அணையைக் கட்ட 11948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது முக்கியமாக அணையின் பணியாளர்கள், தொழிலாளர்கள், இயந்திரங்களை கொண்டு வந்து எடுத்துச் செல்ல தொடங்கப்பட்டது. பின்னர் சுற்றுலா பயணிகளுக்காகவும் திறக்கப்பட்டது.இந்தியாவில் கூட பலர் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். நம் ஊரில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் ரூ.250 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நம்மை பிடிக்கும் டிடிஆரை பொறுத்தது. சிலர் அபராதம் விதித்து தொடர்ந்து பயணிக்க அனுமதிப்பர். சிலர் உடனடியாக அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவர்.

சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...
திமுக - விசிக இடையே ஏற்படும் விரிசல்.. திருமாவளவன் சொன்னது என்ன?
திமுக - விசிக இடையே ஏற்படும் விரிசல்.. திருமாவளவன் சொன்னது என்ன?...