படுத்து தூங்கும் கட்டிலை காராக மாற்றிய இளைஞர் – வைரலாகும் வீடியோ – என்ன ஒரு புத்திசாலித்தனம்

இந்த கட்டில் காரின் மேல் மெத்தை, அதன் பெட் ஷீட், தலையணை என நாம் தூங்குவதற்கு எப்படி தயாராவோமோ அதே போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கட்டிலின் கீழே காரில் பொருத்தப்படும் சக்கதரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கட்டிலின் முன் பக்கத்தில் வழக்கமாக கார்களில் இருக்கும் கண்ணாடி பொறுத்தப்பட்டிருக்கிறது.

படுத்து தூங்கும் கட்டிலை காராக மாற்றிய இளைஞர் - வைரலாகும் வீடியோ - என்ன ஒரு புத்திசாலித்தனம்

கட்டில் கார்

Updated On: 

17 Apr 2025 21:08 PM

மேற்கு வங்கத்தை (West Bengal) சேர்ந்த ஒருவர் தான் தூங்கும் படுக்கையை முழுமையாக இயங்கக்கூடிய காராக வடிவமைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த காரை அவர் ரோட்டில் ஓட்டி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. அவரது வித்தியாசமான, அதே நேரம் வேடிக்கையான கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் (Instagram) பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 60 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். அந்த வீடியோவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர், பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் தன்னுடைய படுக்கை காரை ஓட்டிக்கொண்டு செல்கின்றார்.

இந்த கட்டில் காரின் மேல் மெத்தை, அதன் மேல் பெட் ஷீட், தலையணை என நாம் தூங்குவதற்கு எப்படி தயாராவோமோ அதே போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கட்டிலின் கீழே காரில் பொருத்தப்படும் சக்கதரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கட்டிலின் முன் பக்கத்தில் வழக்கமாக கார்களில் இருக்கும் கண்ணாடி பொறுத்தப்பட்டிருக்கிறது. நடுவே ஸ்டியரிங் பொறுத்தப்பட்டிருக்கிறது. காரை ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென எழுந்து நின்று வீடியோவுக்கு போஸ் கொடுக்கிறார். அவருடன் அவரது நண்பர்கள் வீடியோ எடுத்தபடி பின் தொடர்கின்றனர். சாலையில் செல்பவர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பெங்களுரூ டிராஃபிக்கிற்கு ஏற்ற கட்டில் கார்?

 

இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே ஷாருக்கான் ஸ்டைலில் போஸ் கொடுக்கிறார். காரில் என்ன வகையான இன்ஜின் பொறுத்தப்பட்டிருக்கிறது என தெரியவில்லை. சமூக வலைதளங்களில் பலரும் இவரை பாராட்டியும் கலாய்த்தும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் பெங்களூரு ட்ராஃபிக்கில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தால், பெட்டில் படுத்து தூங்க வசதியாக இருக்கும். பெங்களூருக்கு ஏற்ற வகையில் இந்த கார் இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். மற்றொருவர், இந்த மாதிரி விஷயங்கள் இந்தியாவில் மட்டுமே நடக்கும்! என்று தனது ஆச்சரியத்தை பதிவு செய்துள்ளார்.

வைரல் வீடியோவால் காத்திருக்கும் ஆபத்து

மற்றொரு நபர், “இந்த மாதிரியான வீடியோக்களை பார்க்கத்தான் நெட் சேவைக்காக ரூ.349 ரீசார்ஜ் செய்கிறோமோ என்னவோ!” என்று நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். பார்ப்பதற்கு நகைச்சுவையாக தோன்றினாலும் அவர் இதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பார். நம்மில் பாதி பேருக்கு வித்தியாசமான ஐடியாக்கள் தோன்றும். ஆனால் அதனை செயல்படுத்த தயங்கி அப்படியே விட்டுவிடுவோம். ஆனால் இப்படி சிலர் முயற்சித்த பிறகே விஞ்ஞானிகளாக மாறியிருக்கின்றனர். நாளை இவரும் ஒரு விஞ்ஞானியாக வரக் கூடும். ஆனால் முறையற்ற முறையில் அவர் பொதுவெளியில் வாகனம் இயக்குவதும் தவறுதான். தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில் காவல் துறை மூலம் நடவடிக்கைகளை எடுக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories