சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர் – வைரலாகும் வீடியோ

Youth Uses Syringe as Light Switch: பல்பை சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் ஆன் செய்யும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அவர் அதனை எப்படி செய்தார் என்பது குறித்த போதிய விவரங்கள் இல்லை. தற்போது இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர் - வைரலாகும் வீடியோ

சிரிஞ்சை சுவிட்சாக பயன்படுத்தும் இளைஞர்

Published: 

21 Apr 2025 23:28 PM

இந்தியாவில் (India) உள்ள இளைஞர்கள் பெட்ரோலுக்கு (Petrol) பதிலாக தண்ணீர் மூலம் பைக்கை இயக்குவது, பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் மொபைல் செயலி (App), பெண்களை பாதுகாக்கும் செருப்புகள் என விதவிதமான கண்டுபிடிப்புகளை பற்றி செய்திகளில் படித்திருப்போம். ஆனால் மாணவர்களின் இத்தகைய கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வந்ததா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான். காரணம் அவர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கும் மாணவர் அவற்றை எங்கே சமர்பிப்பது? யாரை அணுகுவது? என்ற தெளிவான செயல் திட்டம் இல்லை. இதனால் பல கண்டுபிடிப்புகள் வீடுகளிலேயே முடங்கிப் போய்விடுகின்றன. இதற்காக மத்திய அரசின் அடல் இன்னோவேசன் மிஷன் (Atal Innovation Mission) போன்ற மத்திய அரசின் திட்டங்கள் இருந்தாலும் அவை குறித்த புரிதல் மாணவர்களிடம் இல்லை.

சுவிட்ச்சுக்கு பதிலாக சிரிஞ்ச்

இந்த நிலையில் அப்படி ஒரு மாணவரின் கண்டுபிடிப்பு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இளைஞர், வீட்டில் உள்ள பல்பை ஆன் செய்வதற்கு சுவிட்ச்சிற்கு பதிலாக சிரிஞ்ச் (syringe) ஒன்றைப் பயன்படுத்துகிறார். பொதுவாக வீடுகளில் லைட், ஃபேன், ஏ.சி போன்ற அனைத்து விதமான மின் சாதனங்களை ஆன் செய்ய சுவிட்சுகளை பயன்படுத்துவோம்.  ஆனால் இந்த வீடியோவில், இளைஞர் ஒருவன், பல்பை நேரடியாக கரண்ட் கம்பிகளுடன் இணைத்துவிட்டு, அதை ஆன்-ஆஃப் செய்ய சிரிஞ்ச் ஒன்றை பயன்படுத்தியிருக்கிறார்.

சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்

 

பொதுவாக மருத்துவமனைகளில் பயன்படுத்தும் ஒரு சிரிஞ்சை எடுத்து, இரண்டு எலக்ட்ரிக் வயர்களுக்கு நடுவில் அதை இணைத்துள்ளார். அந்த சிரிஞ்ச்சை இஞ்செக்ட் செய்தால் பல்பானது ஒளி தருகிறது. பின்னர் அதை பின்வாங்கினால், பல்ப் அணைந்துவிடுகிறது.

இந்த வீடியோ இந்திய இளைஞர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை காட்டுவதாக ஒரு சிலர் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோவில் அவர் எப்படி சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்கிறார் என்பதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. இது ஒரு கண்டுபிடிப்பா அல்லது வீடியோவுக்காக ஏமாற்றுகிறாரா என பலரும் தங்களது சந்தேகங்களை கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களும் இல்லை.

தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ”இன்ஜெக்‌ஷன் போட்டா நோய் குணமாகும்னு தெரியும். ஆனா லைட்டும் எறியும்னு இப்போ தான் தெரியும்” என ஆச்சரியமாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.