Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : “Harry Potter” இந்தியாவில் என்ன செய்கிறார்?.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய நபர்!

Harry Potter Lookalike | அச்சு அசல் ஹாரி பாட்டரின் தோற்றம் கொண்ட நபரின் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Viral Video : “Harry Potter” இந்தியாவில் என்ன செய்கிறார்?.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய நபர்!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Published: 02 Apr 2025 16:29 PM

அச்சு அசல் ஹாரி பாட்டர் (Harry Potter) போலவே இருக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மகா கும்பமேளாவில் (Maha Kumbh Mela) எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பலர் அந்த நபர் யார், அவருக்கும் ஹாரி பாட்டருக்கும் என்ன தொடர்பு என வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில் அந்த நபர் யார், அவர் எப்படி இவ்வளவு பிரபலமானார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் பெறும் வரவேற்பை பெற்ற ஹாரி பாட்டர்

ஜே.கே.ரவுலிங் (J.K.Rowling) என்ற எழுத்தாளர் எழுதிய 7 கற்பனை கதைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது தான் ஹாரி பாட்டர் திரைப்படம். இந்த படம் புத்தகங்களை போலவே பல பாகங்களாக பிரித்து வெளியிடப்பட்டன. அதன்படி ஹாரி பாட்டர் திரைப்படம் மொத்தம் 8 பாகங்களாக வெளியிடப்பட்டது. ஜே.கே.ரவுலிங்கின் 7வது புத்தகம் இரண்டாக பிரிக்கப்பட்டு 7 மற்றும் 8வது பாகங்கள் வெளியிடப்பட்டன.

இந்த திரைப்படங்கள் 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வரிசையாக வெளியாகின. இந்த திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் தான் ஹாரி பாட்டர். இந்த கதாப்பத்திரத்தில் டேனியல் ராட்க்ளிஃப் (Daniel Radcliffe) நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்த்த திரைப்படமாக இருந்தது. குறிப்பாக ஹாரி பாட்டார் கதாப்பாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

ஹாரி பாட்டர் இந்தியாவில் என்ன செய்கிறார்

இந்த நிலையில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில் ஹாரி பாட்டர் தோற்றம் கொண்ட ஒரு நபர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகை புரிந்தனர்.

இணையத்தில் வைரலாகு வீடியோ

கூலாக சப்பாத்தில் சாப்பிட்ட ஹாரி பாட்டர்

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் அச்சு அசல் ஹாரி பாட்டர் தோற்றம் கொண்ட நபர் ஒருவர், சாலையோர உணவகம் ஒன்றில் சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அவரை அங்கிருக்கும் நபர்கள் மிகவும் வித்தியாசமாக பார்க்கின்றனர். அப்போது பெண் ஒருவர் மைக்கை அந்த நபரிடம் நீட்டி ஏதோ கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த நபர் சிரிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் நபர்கள் இந்த நபர் அச்சு அசலாக ஹாரி பாட்டர் போலவே இருக்கிறாரே என்று வியந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுவாமி நாராயண் கோயிலை கண்டு ஆச்சரியப்பட்ட ஜே.டி.வான்ஸ்!
சுவாமி நாராயண் கோயிலை கண்டு ஆச்சரியப்பட்ட ஜே.டி.வான்ஸ்!...
88வது வயதில் காலமானார் போப் பிரான்சிஸ் - வத்திக்கான் அறிவிப்பு!
88வது வயதில் காலமானார் போப் பிரான்சிஸ் - வத்திக்கான் அறிவிப்பு!...
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை..!
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை..!...
பயணிகளே..! புறநகர் ஏசி ரயில் எப்போதெல்லாம் இயக்க வேண்டும்..?
பயணிகளே..! புறநகர் ஏசி ரயில் எப்போதெல்லாம் இயக்க வேண்டும்..?...
வில்லன் ரோல் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்
வில்லன் ரோல் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்...
வெள்ளிக்கிழமை பிரதோஷம்.. சிவனை வழிபட்டால் இவ்வளவு சிறப்பா?
வெள்ளிக்கிழமை பிரதோஷம்.. சிவனை வழிபட்டால் இவ்வளவு சிறப்பா?...
அட! ஒரு மாத்திரை அளவில் பேஜ்மேக்கர் கண்டுபிடிப்பா?
அட! ஒரு மாத்திரை அளவில் பேஜ்மேக்கர் கண்டுபிடிப்பா?...
4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!
4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!...
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!...
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா...
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு...