Viral Video : மின்சார வயர்கள் மீது அசால்டாக நிற்கும் ஆடு.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
Goat Standing on Electric Wires | இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில், ஆடு ஒன்று மின்சார வயர்கள் மீது நின்றுக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் வியந்து தங்களது கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர்.

பூமியில் புவி ஈர்ப்பு சக்தி (Magnetic Force) உள்ளது, அதன் காரணமாக தான் பூமியில் எந்த ஒரு பொருளை மேலே வானத்தை நோக்கி எரிந்தாலும் அது கீழே வந்து விழுகிறது. பூமியின் இந்த தன்மை குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆடு ஒன்று புவி ஈர்ப்பு சக்தியையே போலியாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. அதாவது, ஆடு ஒன்று மின்சார வயர்கள் மீது நின்றுக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மின்சார வயர்கள் மீது அசால்டாக நின்றுக்கொண்டிருக்கும் ஆடு
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஆடு ஒன்று எந்த வித உதவியும் இன்றி மின்சார் கம்பிகள் மீது தரையில் நின்றுக்கொண்டிருப்பதை போல நிற்கிறது. பூமியில் புவி ஈர்ப்பு சக்தி உள்ளதால் எந்த ஒரு பொருளும் பூமியை விட்டு இடைவெளியில் இருந்தாலும் அது மீண்டும் பூமிக்கே வந்துவிடும். உதாரணமாக ஒரு பந்தை வானத்தை நோக்கி எரிகிறோம் என்றால் அது புவி ஈர்ப்பு சக்தியின் காரணமாக மீண்டும் பூமியை நோக்கி வந்துவிடும்.
இதேபோல மனிதர்களை எடுத்துக்கொள்வோம். ஒருவர் பூமியில் நின்றுக்கொண்டு குதிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை பூமியின் புவி ஈர்ப்பு சக்தி மீண்டு கீழே கொண்டுவந்துவிடும். ஒரு பொருளோ, இயந்திரமோ, நபரோ பூமியின் மேற்பறப்பை விட்டு மேலே செல்ல வேண்டும் என்றால் அதற்கு முறையான அறிவியில் தேவைப்படும். இந்த நிலையில், எந்த வித அறிவியல் உதவியும் இன்றி ஆடு ஒன்று மின்சார கம்பியின் மீது நின்றுக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
อันแม่ถามคำหนึ่งได้บ่ลูก pic.twitter.com/m4UY5m7PvW
— Red Skull (@RedSkullxxx) April 5, 2025
அறிவியலையே அதிர்சிக்குள்ளாக்கிய ஆடு
ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பொதுவாக சமவெளியில் வாழும் பண்புகளை கொண்டவை. சில வகை ஆடுகள் மலை ஏறும் திறன் கொண்டவை. ஆனால் பொரும்பாலான கால்நடைகள் சமவெளி பகுதியிலே வாழும். ஆனால் ஆடு ஒன்று பூமியின் இருந்து சுமார் 20 அடி உயர் உள்ள மின்சார வயர்கள் மீது அசால்டாக நின்றுக்கொண்டிருக்குகிறது. அந்த மின் கம்பத்தில் இருந்து பல மின்சார வயர்கள் செல்லும் நிலையில், இரண்டு மின்சார கம்பிகளின் மீது நான்கு கால்களையும் வைத்து அந்த ஆடு நின்றுக்கொண்டு இருக்கிறது. அந்த மின்சார வயர்கள் மீது சில பச்சை இலைகள் சிக்கியுள்ள நிலையில், மின்சார வயர்கள் மீது நின்றுக்கொண்டு அந்த ஆடு அதனை சாப்பிடுகிறது.
இத்தகைய அசாத்திய நிகழ்வு அடங்கிய வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், இந்த ஆடு அறிவியலையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.