Viral Video : ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம்.. அதிர்ச்சியில் உறைந்த இளம் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த காதலன்!

Waterfall Ring Drop Leads to Surprise Engagement | வித்தியாசமான கால சூழல் மற்றும் இடங்களில் வைத்து காதலர்கள் ப்ரொபோஸ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்யும் போது மோதிரம் தவறி விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம்.. அதிர்ச்சியில் உறைந்த இளம் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த காதலன்!

வைரல் வீடியோ

Published: 

18 Apr 2025 23:16 PM

மனிதர்களாக பிறந்த அனைவருமே தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது நிச்சயம் காதலில் விழுவார்கள். மனிதர்களை உயிர்ப்புடனும், அன்புடனும் இருக்க செய்வதில் காதலுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது. காதலிப்பது எவ்வளவு ஒரு அழகானதாக உள்ளதோ, அதே அளவுக்கு அந்த காதலை தங்களுக்கு பிடித்தவர்களிடம் வெளிப்படுத்துவதும் மிகவும் அழகானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்கள் தங்களது காதலை மிகவும் அழகான முறையில், மறக்க முடியாதவையாக இருக்க வேண்டும் என பல ரிஸ்குகளை எடுக்கின்றனர்.

சொதப்பலில் முடிந்த ப்ரொபோசல் – ஆனாலும் காதலியை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய காதலன்

காதலர்கள் சிலர் மலை உச்சியில் நின்று காதலை வெளிப்படுத்துவது, பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று காதலை வெளிப்படுத்துவது, பரிசுகளை வாங்கி கொடுத்து காதலை வெளிப்படுத்துவது, முக்கியமான நாட்களில் காதலை வெளிப்படுத்துவது என பல வகையில் தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியின் அருகில் தனது காதலை வெளிப்படுத்திய நிலையில், மோதிரம் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்துவிடுகிறது. ஆனால் அதற்கு பிறகு தான் அந்த பெண்ணுக்கு மிகப்பெரிய ஷாக் காத்திருக்கிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம்

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் அமெரிக்காவின், இடாஹோ பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்கிறார். ஆனால், அவர் ப்ரொபோஸ் செய்வதற்காக வைத்திருந்த மோதிரம் தவறி நீர்வீழ்ச்சியில் விழுகிறது. அதனை கண்டு அந்த இளம் பெண் கடும் அதிர்ச்சிக்குள்ளாகுகிறார். இந்த நிலையில், மோதிரம் நீர்வீழ்ச்சியில் விழுகிறதா என்பதை அந்த பெண் எட்டி பார்க்கிறார். ஆனால், மோதிரம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது என நினைத்து அவர் மிகவும் வருத்தமடைகிறார்.

ஆனால் அப்போதுதான் அவருக்கு மிகப்பெரிய ஷாக் கிடைக்கிறது. அதாவது அந்த இளைஞர் நீர்வீழ்ச்சியில் மோதிரத்தை தவற விட்டதை போல நடித்துள்ளார். அதனை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்த நிலையில், அவரை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் அவர் அந்த பெண் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அந்த மோதிரத்தை அளித்து ப்ரோபோஸ் செய்கிறார். அதனை கண்டு மகிழ்ச்சியின் உச்சிக்கே அந்த பெண் சென்றுவிடுகிறார். இதனை பார்க்கும் பலரும் அந்த இளைஞர் முதல் முறையே மோதிரத்தை கொடுத்து ப்ரொபோஸ் செய்திருந்தால் கூட அந்த பெண் இவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார் என்று கூறி வருகின்றனர்.