Employee Quits Job: முகத்தில் வந்த ஒற்றை பரு.. வேலையை வேண்டாம் என்ற பணியாளர்.. வைரலாகும் பதிவு!
Acne Leads to Job Resignation: ஒரு ஊழியர், முகத்தில் வந்த ஒற்றைப் பருவை காரணம் காட்டி வேலையை விட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை செய்யும் இடத்தின் வெப்பம் மற்றும் ஈரப்பதம், இயந்திரங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் எத்தனால் ஆகியவற்றால் தோலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் வேலையை விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலையை விட்டு வேறு வேலை மாறுவதற்கு இந்த உலகின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை தங்களது மெயிலில் குறிப்பிடுவார்கள். அதில் மன அழுத்தம் (Pressure), அதிக சம்பளம், சிறந்த பணிச்சூழல் போன்ற காரணங்கள் மிகவும் பொதுவானவை. ஆனால், இங்கு ஒரு ஊழியர் தனது முகத்தில் முகப்பரு (Acne) வந்ததற்காக வேலையை விட்டார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால், அப்படி ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பளபளப்பான சருமம் கொண்ட தனது சக ஊழியர் தனக்கு முகப்பரு வந்ததால் வேலையை விட்டுவிட்டார் என்று தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.
என்ன நடந்தது..?
வேலையை விடுவது குறித்து அந்த நபர் தனது லெட்டரில், “ நான் வேலை பார்க்கும்போது வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் கலவையாக உள்ள இடத்தில் இயந்திரங்களுடன் வேலை செய்கிறேன். அப்போது, இயந்திரங்களை எத்தனால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. சில நேரங்களில் அப்படி செய்வது கட்டாயமாகும். ஒரு மாதம் அந்த நபருக்கு இதுகுறித்து பயிற்சி அளித்த பிறகு, ஒருநாள் காலை ரசாயனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் வருகிறது” என்று தெரிவித்தார்.
நிர்வாகம் விளக்கம்:
இதுகுறித்து நிர்வாகம் தெரிவிக்கையில், ஒரு மாத பயிற்சிக்கு பிறகு, அவர் எங்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். அவரது உடல்நல பிரச்சினை என்னவென்றால், அவருக்கு நெற்றியில் ஒரு பரு வந்தது. இதற்கு முன்னால் தனக்கு முகத்தில் பருக்களே வந்தது இல்லை என்றும், இங்கு வேலைக்கு சென்ற பிறகு ரசாயனங்களை கையாள்வதால், பருக்கள் வருகிறது. இனி எங்களுடன் வேலை செய்ய விருப்பமில்லை.
தொடர்ந்து, நாங்கள் அவரை பற்றி தெரிந்து கொள்ள, அவரது செல்போனிற்கு போன் செய்தோம். ஆனால், அவர் எங்களை ப்ளாக் செய்திருந்தார்.” என்று தெரிவித்தது.
அவரது மெயிலை பார்த்து கவலையடைந்த நிர்வாகம் உடனடியாக அந்த நபரின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள முற்பட்டது. 3 நாட்களுக்கு பிறகு HR ஒருவரை அவரது இடத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் அந்த நபர், HRயிடம் உடல்நல பிரச்சினை என்றால், உடலில் பிரச்சனை இல்லை, முகத்தில் ஒரு பரு வந்தது. அதுவே காரணம் என்று தெரிவித்தார் என்று நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.
இந்தப் பதிவு ஒரு நொடியில் வைரலானது, மக்களை சிரிக்கவும், அதிர்ச்சியடையவும், வாயடைக்கவும் வைத்தது. இந்த சம்பவத்தின் நம்பகத்தன்மையை டிவி9 தமிழ் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தப் பதிவு ரெடிட்’lstsmle331′ என்ற ஹேண்டில் மூலம் பகிரப்பட்டது. இந்தப் பதிவு 4 நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டது, மேலும் 6,000க்கும் மேற்பட்ட மக்கள் இதை ஷேர் செய்து வருகின்றனர்.