25 ஆண்டு நட்பு – மறைந்த நண்பனை விட்டு பிரியாத யானை – துயர சம்பவம்

கடந்த வாரம் ஜென்னி உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறது. இதனையடுத்து துயரத்துக்குள்ளான மற்றொரு யானையான மக்டா அந்த விடத்தை விட்டு அகல மறுத்திருக்கிறது. அதனை அப்புறப்படுத்த முயன்றிருக்கின்றனர். ஆனால் மக்டா தனது மறைந்த நண்பனான ஜென்னியை அது இறந்தது தெரியாமல் எழுப்பு முயன்றிருக்கிறது. எவ்வளவு முயன்றும் மக்டா அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

25 ஆண்டு நட்பு - மறைந்த நண்பனை விட்டு பிரியாத யானை - துயர சம்பவம்

மறைந்த நண்பனை விட்டு பிரியாத யானை

Published: 

22 Mar 2025 08:44 AM

ரஷ்யாவில் (Russia) ஓய்வுபெற்ற சர்கஸ் யானைகள் (Elephant) ஜெனி மற்றும் மக்டா என இரண்டு யானைகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புடன் பழகி வந்திருக்கின்றன. சர்கஸ் போட்டிகளில் ஒன்றாக பங்கேற்று வந்திருக்கின்றன. இந்த நிலையில் கடந்த வாரம் ஜென்னி உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறது. இதனையடுத்து துயரத்துக்குள்ளான மற்றொரு யானையான மக்டா அந்த விடத்தை விட்டு அகல மறுத்திருக்கிறது. அதனை அப்புறப்படுத்த முயன்றிருக்கின்றனர். ஆனால் மக்டா தனது மறைந்த நண்பனான ஜென்னியை அது இறந்தது தெரியாமல் எழுப்பு முயன்றிருக்கிறது. எவ்வளவு முயன்றும் மக்டா அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாகி உலக அளவில் சமூக வலைதளவாசிகளை கண் கலங்க செய்திருக்கிறது.

இது தொடர்பாக ஒரு நெட்டிஷன் தனது கமெண்ட்டில் 25 ஆண்டுகளாக நட்பாக இருந்த யானை உயிரிழந்திருப்பது மற்றொரு யானைக்கு தாங்கிக்கொள்ள முடியாது. மனிதர்களை விட அன்பும் நம்பிக்கையும் சக உயிரை மதிக்கும் பண்பும் விலங்குகளுக்கு அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு விலங்குகளின் வாழ்வை புரிந்து கொள்ளும் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் உணர்ச்சிகளை மதித்து, அவர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் முறையான பராமரிப்பு ஆகியவற்றை வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மயானவர்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

மனிதர்களை விட உணர்ச்சிமிக்கதாக காணப்படும் யானைகள்

 

இதற்கு முன்பும் யானைகள் தங்கள் கூட்டத்தில் மரணமடைந்த யானைகளின் எச்சங்களைப் தொட்டுப் பார்ப்பது, எலும்புகளை எடுத்துச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன. இது
யானைகள் மனிதர்களை விட உணர்ச்சிமிக்கதாகவும் நினைவாற்றல் கொண்டதாகவும் நமக்கு உணர்த்துகிறது. மேலும் இந்த நிகழ்வுகள் யானைகள் கொண்டுள்ள சமூக பிணைப்புகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அவை மனிதர்களைப் போலவே துக்கம், இழப்பு மற்றும் அன்பை வெளிப்படுத்துகின்றன என்பதை நமக்கு உணர்த்துகிறது.

பொதுவாக யானைகள் மதம் பிடித்து மூர்க்கமாக நடந்து கொள்வதையும் விளை நிலங்களை அவை சேதப்படுத்துவதையும் பார்த்திருக்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள் அவற்றின் மீதான எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தியிருக்கும். ஆனால் மனிதர்களை போலவே கருணை உள்ளம் கொண்ட மேலே குறிப்பிடப்பட்ட சில சம்பவங்களின் மூலம் நமக்கு தெரியவருகிறது.

வித்தியாசமான முறையில் துக்கம் அனுசரித்த யானைகள்

கடந்த 2006 ஆம் ஆண்டில் கென்யாவின் தேசிய பூங்காவில், ஒரு யானை கூட்டம் தங்கள் கூட்டத்தில் உள்ள மரணமடைந்த யானைகளின் எச்சங்களைத் தொட்டு, தங்கள் தந்தங்களை அதில் தடவி வித்தியாசமான முறையில் துக்கம் அனுசரித்தது பதிவாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில், ஒரு யானை மரணமடைந்த யானையின் உடலுடன் மூன்று நாட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிகழ்வுகள் யானைகளின் ஆழமான உணர்ச்சி கொண்டது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

முதுமலையில், யானைகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த முகாமில், கோயில் யானைகள் உடல் மற்றும் மன உளைச்சலைப் போக்கி, ஓய்வெடுக்கவும், மருத்துவ சிகிச்சை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு முதுமலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள யானைகளின் மீது அதன் நடவடிக்கைகள் மற்றும் அவைகளின் உணர்வுகளைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது யானைகளின் சமூக பிணைப்புகளைப் புரிந்து கொள்ள தேவைப்படும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.