Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாணவனின் ஹால் டிக்கெட்டை பறித்து சென்ற பருந்து – கடைசியில் நடந்த ட்விஸ்ட் – வைரலாகும் வீடியோ

Student's Hall Ticket Snatched by Eagle: கேரளாவில் குடிமைப்பணி தேர்வு எழுத வந்த மாணவரின் ஹால் டிக்கெட்டை பருந்து பறித்து சென்ற நிலையில், அடுத்து அந்த பருந்து செய்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவனின் ஹால் டிக்கெட்டை பறித்து சென்ற பருந்து – கடைசியில் நடந்த ட்விஸ்ட்  – வைரலாகும் வீடியோ
ஹால்டிக்கெட்டை பறித்துச் சென்ற பருந்து
karthikeyan-s
Karthikeyan S | Published: 11 Apr 2025 17:24 PM

கேரளா (Kerala) மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான சம்வபம் நடந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  ஒரு மாணவர் குடிமைப்பணி  தேர்வு எழுத தயாராவதற்காக தனது பையில் இருந்து ஹால் டிக்கெட்டை (Hall Ticket) வெளியில் எடுத்து வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த பருந்து (Eagle) ஒன்று மாணவனின் கைகளில் இருந்து ஹால் டிக்கெட்டை பறித்துக்கொண்டு பறந்து சென்றது. பின்னர் பள்ளியில் உள்ள கட்டிடத்தின் மேற்பகுதியில் உள்ள ஜன்னலில் ஹால்டிக்கெட்டை வைத்துக்கொண்டு உட்கார்ந்தது. இதனையடுத்து அந்த பருந்திடம் இருந்து ஹால்டிக்கெட்டை எப்படி மீட்பது என தெரியாமல் பள்ளி மாணவர் விழித்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் தேர்வறைக்கு செல்ல வேண்டிய இறுதி நிமிடத்தில் ஹால்டிக்கெட்டை பருந்து கீழே விட்டது. இதனால் அம்மாணவனால் அன்று தேர்வு எழுத முடிந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்ற சம்பவங்கள் கேரளாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி, 2023-ன் போது கேரளாவின் அடூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பருந்துகள் தொடர்ச்சியாக கிராமக்களை தாக்கி வந்திருக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லும் போது தங்களை பாதுகாக்க குடைகள், குச்சிகள் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டியிருந்திருக்கறது. வனத்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என தெரிவித்திருக்கின்றனர்.  இதனையடுத்து ஊர் மக்கள் பருந்துகளை தாங்களே பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நடந்தன. 

மாணவனின் ஹால் டிக்கெட்டை பருந்து பறித்து சென்ற வீடியோ வைரல்

 

கிராம மக்களை விடாமல் துரத்திய பருந்துகள்

இதே போல கடந்த பிப்ரவரி, 2025ல், கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரம் என்ற பகுதியில் பருந்து ஒன்று மக்களை தாக்கி வந்திருக்கிறது. இதனையடுத்து அந்த பருந்து பிடிக்கப்பட்டு காட்டஞ்சேரி வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டது. ஆனால் 6 நாட்களில் மற்றொரு பருந்துடன் மீண்டும் வந்து மக்களை தாக்கியிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைேயே கவலையை அதிகரித்திருக்கிறது. 

பருந்துகளின் தாக்குதல்களுக்கு காரணம்

பொதுவாக பருந்துகள் மனிதர்களைத் தாக்குவதில்லை. ஆனால், அது வசிக்கும் கூடு அல்லது குஞ்சுகளை பாதுகாக்கவே மனிதர்களுடன் இதுபோன்ற மோதல்களில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.  பருந்துகள் என்று மட்டுமல்ல, பறவைகள், விலங்களுகளின் இயல்பான குணங்களை புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.  அப்படி தெரிந்துகொண்டால் மட்டுமே மனிதர்கள் தங்களை அவைகளிடம் இருந்து பாதுகாப்பாக வாழ முடியும். 

மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...