முதியவரின் வயிற்றில் சிக்கிய முள்ளங்கி – காரணத்தைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி

Shocking medical case: தென் அமெரிக்காவில் 72 வயது முதியவரின் வயிற்றில் சிக்கிய முள்ளங்கியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். இந்த நிலையில் அது அவரது வயிற்றில் எப்படி சிக்கியது என கேட்ட மருத்துவர்கள், முதியவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முதியவரின் வயிற்றில் சிக்கிய முள்ளங்கி - காரணத்தைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி

மாதிரி புகைப்படம்

Published: 

20 Apr 2025 00:13 AM

மருத்துவ பணி என்பது சிக்கலான பணி. சில வேலைகளில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் கற்றுக்கொள்ள ஒன்றும் இருக்காது. அதனால் ஒரு சில ஆண்டுகளிலேயே ஒருவர் குறிப்பிட்ட வேலையை செய்வதில் மாஸ்டராகி விடுவார். ஆனால் மருத்துவம் (Medicine) என்பது அப்படியான வேலை இல்லை. மனித உடல் அமைப்பை போலவே மருத்துவமும் சிக்கலானது. அவர்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். அதனால் மற்ற பணிகளைக் காட்டிலும் மருத்துவ துறை உன்னதமாக பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள் (Doctor) தங்கள் பணிகளின் போது பலவித விசித்திரமான, ஆச்சரியமான சம்பவங்களை காண்கிறார்கள். அவற்றில் சில சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் அவற்றை மருத்துவர்கள் பலரும் எளிதில் கையாண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வு தான் தென் அமெரிக்காவில் (America) நடந்துள்ளது. அதன் விவரங்களை கேட்டால் நீங்களும் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள்.

ஆசை மனிதனை எந்த சூழ்நிலையிலும் உயிர்வாழ வைக்கும், ஆனால் ஒன்றின் மீதான அதீத ஆசை மனிதனை அழித்துவிடும் என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். ஒருவர் தனது ஆசைக்காக தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால், கடைசியில் மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்.

முதியவரின் வயிற்றில் சிக்கிய முள்ளங்கி

தென் அமெரிக்காவில் 72 வயது முதியவர் தனது உடலில் ஒரு பெரிய முள்ளங்கி போன்ற கிழங்கை வைத்திருந்ததை மருத்துவர்கள் எக்ஸ்ரே மூலம் கண்டுபிடித்தனர். அது அவரது மலக் குடலில் மிக ஆழமாக சென்று சிக்கியிருந்தது. மருத்துவர்கள் அதனை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அந்த பெரிவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளித்து, அந்த காய்கறியை அகற்றினர். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

காரணத்தை கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் அந்த கிழங்கு எப்படி அவரது உடலில் சென்றது என முதியவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அந்த முதியவர் கூறிய பதில் மருத்துவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதாவது அவர் தனது பார்ட்னருடன் வீட்டில் உறவில் இருந்தபோது தான் இந்த விபரீதம் நடந்ததாக கூறியிருக்கிறார். சிகிச்சையின் போது அவரது உடலிலிருந்து முள்ளங்கி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அதனால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் அவருக்கு ஏற்படவில்லை என்றும் அவர் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் உறுதிபடுத்தினர்.

இது போல இதற்கு முன், பாட்டில்கள், டார்ச் லைட் போன்றவற்றை மனித உடலிலிருந்து அகற்றிய அனுபவங்கள் அவர்களுக்கு உள்ளதாக தெரிவித்தனர். இதே போல கடந்த 2024 ஜூலையில் மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூரில், 60 வயதுடைய ஒரு விவசாயியின் வயிற்றில் 16 அங்குல நீளமுள்ள ஒரு சுரைக்காய் சிக்கியிருந்தது. இது அவருக்கு கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தியது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது, எக்ஸ்ரே மூலம் அந்தக் காய்கறி கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் மூலம் அந்த சுரைக்காய் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.