Viral Video : திடீரென இடிந்து விழுந்த சுவர்.. சுருண்டு விழுந்த பொதுமக்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
Delhi Wall Collapse Video Goes Viral | டெல்லியின் சந்தர் விஹார் பகுதியில் சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டெல்லி, ஏப்ரல் 13 : டெல்லியில் (Delhi) பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், ஒரு முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பொதுமக்களின் மீது சுவர் இடிந்து விழும் நிலையில், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் சுருண்டு விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுவர் இடிந்து விழுந்து விபத்து
டெல்லியின் சந்தர் விஹார் (Chander Vihar) என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தர் விஹார் பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலை ஒன்றில் பொதுமக்கள் நடந்துச் சென்றுக்கொண்டு இருந்தபோது ஒரு கடையின் மேலே இருந்த சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
दिल्ली | चंदर विहार में आचानक गिरी दिवार, एक बुजुर्ग की मौत, 3 घायल, वीडियो आया सामने #Delhi #ViralVideo #BuildingCollapse pic.twitter.com/08d0qWiACB
— Vistaar News (@VistaarNews) April 13, 2025
இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிசிடிவி காட்சி
இணையத்தில் வைரலாகி வரும் அந்த சிசிடிவி காட்சியில், பொதுமக்கள் சிலர் ஒரு சாலையில் நடந்து செல்கின்றனர். அந்த சாலையில் வாகனங்கள் மட்டுமன்றி ஏராளமான பொதுமக்களும் நடந்து சென்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், ஒரு கடையின் மேல் இருக்கும் சுவர் இடிந்து விழுகிறது. அந்த சுவர் அந்த வழியாக சென்றுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மீது விழுகிறது. அதன் காரணமாக ஒரு பெண் மற்றும் முதியவர் சுருண்டு விழுகின்றனர். சற்று நேரத்தில் அந்த பெண் எழுந்து செல்லும் நிலையில், முதியவர் எழுந்திருக்காமல் அப்படியே படுத்துக்கொண்டு இருக்கிறார்.
இதற்கு ஒரு சில நொடிகள் கழிந்து சுவரின் மேலும் சில பகுதிகள் இடிந்து விழுகிறது. இதன் காரணமாக மேலும் சிலர் சுருண்டு விழுகின்றனர். பார்ப்பதற்கே மிகவும் அச்சுறுத்தும் வகையில் இந்த விபத்து உள்ளது. இந்த நிலையில், சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.