இளநீர் டீ குடிச்சிருக்கீங்களா ? வைரலாகும் வீடியோ !
Coconut Water Tea Trend: ஒரு வீடியோவில் ஒரு பெண் ஒருவர் இளநீரில் டீ போடுகிறார். இஞ்சி டீ, மசாலா டீ, மேகி டீ வரிசையில் இளநீர் டீயும் டிரெண்டாகி வருகிறது. என்னடா இது டீக்கு வந்த சோதனை என நெட்டிஷன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தேநீர் (Tea) என்பது மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய பானம். பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்ததும், பல் துலக்கிய உடனேயே செய்யும் முதல் விஷயம், தேநீர் அருந்துவதுதான். குறிப்பாக தேநீர் பிரியர்கள் எத்தனை கப் வேண்டுமானாலும் தேநீர் குடிப்பார்கள். நீங்களும் கருப்பு தேநீர், பச்சை தேநீர், மூலிகை தேநீர், மசாலா தேநீர் என பல்வேறு வகையான தேநீரை ருசித்திருக்கலாம். ஆனால் நீங்கள் எப்போதாவது இளநீர் (Coconut Water) தேநீர் குடித்திருக்கிறீர்களா? ஒரு பெண் இளநீரின் நீரில் இருந்து தேநீர் தயாரிப்பதைக் காட்டும் ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. உண்மையாகவே அந்த பெண் தண்ணீருக்குப் பதிலாக இளநீர் தண்ணீரைப் பயன்படுத்தி தேநீர் தயாரிக்கிறார்., இந்தக் வீடியோவைப் பார்த்த நெட்டிஷன்கள் அந்த பெண்ணுக்கு எல்லாமே சாத்தியம் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தேநீர் பொதுவாக தண்ணீர் மற்றும் பால் கலந்து தயாரிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கே, ஒரு பெண் பாலுக்குப் பதிலாக இளநீர் தண்ணீரைப் பயன்படுத்தி சூடான தேநீர் தயாரித்துள்ளார். இந்த காணொளி _hetals_art_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாலுக்கு பதிலாக இளநீரில் டீ
View this post on Instagram
வைரலாகி வரும் வீடியோவில், ஒரு பெண் ஒரு பாத்திரத்தை கேஸ் அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் தண்ணீர், தேநீர் தூள், சர்க்கரை மற்றும் பால் சேர்த்து சூடான தேநீர் தயாரிப்பதைக் காணலாம்.
ஏப்ரல் 2, 2025 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ, 2.5 லட்சம் பார்வைகளையும் பல கமெண்ட்களையும் பெற்றுள்ளது. ஒரு பயனர், “இந்த மக்கள் ஏன் இப்படி நம் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார்கள்?” என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர், “இது மிகவும் பைத்தியக்காரத்தனமானது” என்றார். மற்றொரு பயனர், “இதுதான் மக்களின் நிலைமை” என்று கருத்து தெரிவித்தார்.
வித்தியாசமான உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து
பொதுவாக வித்தியாசமான உணவுகளை தேடி உண்ணும் பழக்கம் சமீபத்தில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் தற்போது அதிகமாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பிரபலங்கள் இதுபோன்ற வித்தியாசமான உணவுகளை பிரபலமாக்குகின்றனர். அதனைப் பார்த்து மக்களுக்கும் அதனை ஒரு முறையாவது அப்படிப்பட்ட உணவை ருசித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை யாரும் உணர்வதில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் மேகி டீ என்ற ஒன்று வைரலானது. அதில் கடைக்காரர் வழக்கமான முறையில் டீ போட்டு அதன் மேல் ஏற்கனவே சமைத்து வைத்திருந்த மேகியை போடுகிறார். இதனை ஒரு வாடிக்கையாளர் ரசித்து குடிக்கிறார். இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியாக்கியது. என்னடா டீக்கு வந்த சோதனை என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.