Viral Video : தங்கத்தை உருக்கி நொடி பொழுதில் பணமாக தரும் மெஷின்.. சீனாவின் அசத்தல் கண்டுபிடிப்பு!
China's Gold ATM Video Goes Viral | சீனாவின் கண்டுபிடிப்புகள் பல ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அந்த வகையில் சீனாவின் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தங்க நகைகளை நொடி பொழுதில் உருக்கி பணமாக தரும் அசத்தல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பு தான் அது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
உலக அளவில் தங்கம் (Gold) ஒரு சிறந்த முதலீடாக (Investment) கருதப்படுகிறது. காரணம், ஏதேனும் பணம் தேவை ஏற்படும் போது தங்கத்தை கொடுத்து அதனை பணமாக பெற்றுக் கொள்ளலாம். இதன் காரணமாக பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்த மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் தங்கத்தில் ஆபரணங்களை அணிந்து கொள்ளலாம். ஒருவேளை நிதி பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அதனை அடகு வைத்தோ அல்லது விற்பனை செய்தோ பணமாக பெற்றுக்கொண்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
தங்கத்தை பணமாக மாற்ற சீனா புது யோசனை
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தை அடகு வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ பொதுமக்கள் வங்கிகள் அல்லது அடகு கடைகளை நாடுவர். ஆனால் சீனாவில் ஒரு வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன் மூலம் நொடிப்பொழுதில் தங்கத்திற்கு பதிலாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தங்கத்தை பணமாக பெற சீனாவில் அப்படி என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நொடிபொழுதில் தங்கத்தை உருக்கி பணமாக தரும் இயந்திரம்
A gold ATM in Shanghai, China
It melts the gold and transfers the amount corresponding to its weight to your bank account.
— Tansu Yegen (@TansuYegen) April 19, 2025
இந்தியாவை பொறுத்தவரை தங்க நகைகளுக்கு பணம் பெற வேண்டும் என்றால் அதனை அடகு கடையிலோ அல்லது வங்கியோ வைத்தோ அல்லது விற்பனை செய்தோ தான் பணத்தை வாங்க முடியும். இதற்கு சில விதிமுறைகளும் உள்ளன. ஆனால், சீனாவில் அத்தகைய விதிமுறைகள் எதுவும் இல்லை. ஏடிஎம் போல உள்ள ஒரு இயந்திரத்தில் தங்க நகைகளை வைத்து அதனை மிக சுலபமாக பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
இது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் ஏடிஎம் இயந்திரம் போல் இருக்கும் இயந்திரம் ஒன்றில் சில தங்க நகைகளை வைக்கிறார். அந்த இயந்திரம் உடனடியாக அந்த தங்கத்தின் எடையை மதிப்பிடுகிறது. அதனை தொடர்ந்து அந்த எடைக்கு ஏற்ப எவ்வளவு பணம் வரும் என்பதையும் திரையில் காட்டுகிறது. அந்த பணம் போதும் என நினைக்கும் நபர்கள் அதனை மிக சுலபமாக உடனடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.