Viral Video : உயிரை பணயம் வைத்து பூனையை காப்பாற்றிய பெண்.. குவியும் பாராட்டுக்கள்!
Woman Rescues Drowning Cat | இளம் பெண் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய பூனையை தைரியமாக காப்பாற்றிய வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் வீடியோ
இளம் பெண் ஒருவர் தனது உயிரை ஒரு பொருட்டாக நினைக்காமல், தண்ணீரில் மூழ்கி தத்தளித்த பூனையை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த இளம் பெண்ணின் தைரியமான செயலை பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
பூனையை காப்பாற்றி தேவதையாக மாறிய இளம் பெண்
மனிதர்கள் நாளுக்கு நாள் மனிதாபிமான அற்றவர்களாக மாறி வருகின்றனர். சக மனிதன் படும் துன்பங்களையும், கஷ்டங்களையும் கண்டும் காணாமல் போய் விடுகின்றனர். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், மற்ற உயிரினங்களுக்கு சொல்லவா வேண்டும். உயிர்கள் மீதான அன்பும் மனிதர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. ஆனால், இளம் பெண் ஒருவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த பூனையை, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளார்.
உயிரை பணயம் வைத்து பூனையை காப்பாற்றிய இளம் பெண்
இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், நகரத்தின் நடுவே உள்ள ஆற்றில் பூனை தவறுதலாக விழுந்து விடுகிறது. சிறிது நேரத்தில் அந்த பூனை தண்ணீரில் தத்தளித்து உயிருக்காக போராடுகிறது. இந்த நிலையில், அந்த வழியாக சென்ற இளம் பெண் ஒருவர் தன்னுடைய உடமைகளை எல்லாம் அங்கிருந்தவர்கள் இடம் கொடுத்துவிட்டு பூனையை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இறங்குகிறார்.
இனையத்தில் வைரலாகும் வீடியோ!
தண்ணீர் எவ்வளவு ஆழமானது என்பதை எல்லாம் கண்டுக்கொள்ளாத அந்த பெண் எப்படியாவது பூனையை காப்பாற்ற வேண்டும் என்று தண்ணீரில் நடந்து செல்கிறார். அவர் நடந்து செல்ல செல்ல ஆழம் அதிகரிக்கிறது. இருப்பினும் அந்த பெண் மெதுவாக பூனையிடம் சென்று சேருகிறார். பின்னர் பூனையை காப்பாற்றி மெதுவாக அதனை கறைக்கு கொண்டு வருகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் இளம் பெண்ணின் செயலை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். பூனைக்காக இத்தகைய சவாலை எதிர்க்கொண்ட அந்த பெண் பாராட்டுக்குறியவர் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். ஒரு பூனைக்காக இந்த சவாலான செயலை அந்த பெண்ணுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும், அந்த இளம் பெண் எப்போது மகிழ்ச்சியாகவும், மன நிறைவாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.