Viral Video : குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை.. நெகிழ்ச்சி வீடியோ!
Baby Elephant Learns to Eat | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு சாப்பிட சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
மனிதர்கள் கற்பித்தல் மற்றும் அனுபவத்தினால் தான் பல விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். மனிதர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும்போது அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும், எப்படி நடக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக்கொடுப்பர். அதேபோல தான் விலங்குகளும். விலங்குகள் மனிதர்களை விட வித்தியாசமான தோற்றம் மற்றும் பண்புகளை கொண்டிருந்தாலும் அவை மிகவும் உணர்ச்சி மிக்க உயிரினங்களாக கருதப்படுகின்றன. அவை தங்களது குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமான அன்பை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு சாப்பிட கற்றுத்தரும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லிக் கொடுக்கும் தாய் யானை
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு சாப்பிட கற்றுத் தரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தாய் யானையும் அதன் குட்டி யானையும் அங்கிருக்கும் புற்களை சாப்பிடுகின்றன. அப்போது தாய் யானை, தனது குட்டிக்கு எவ்வாறு புற்களை சாப்பிட வேண்டும் என சொல்லி கொடுக்கிறது. அதற்காக தனது தும்பி கையால் புற்களை பிடுங்கி அதில் இருக்கும் மண் முழுவதுமாக கொட்டும் வரை தட்டிய பிறகு அந்த புற்களை சாப்பிடுகிறது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
That kiddo learning from mother the right way to eat grass. Not even small dirt should go in stomach. See. pic.twitter.com/0UIO3l2Ro3
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 15, 2025
வைரல் விடியோவுக்கு குவியும் கருத்துக்கள்
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அதற்கு தாய் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். தாய் இல்லை என்றால் ஒரு குழந்தை இந்த பூமியில் முறையாக வளர முடியாது என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாகவும், இத்தகைய அழகிய காட்சியை இதுவரை பார்த்ததில்லை என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.