Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral News : 100 கிராம் தங்கத்தை விழுங்கிய 11 வயது சிறுவன்… தீவிர அறுவை சிகிச்சைக்கு பின் நடந்தது என்ன?

Boy Swallowed Gold In China : சீனாவில் 11 வயது சிறுவன் 100 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய சம்பவம் வைரலாகி வருகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுவனுக்கு ஸ்கேன் மூலம் தங்கம் கண்டறியப்பட்டது. இயற்கை முறையில் வெளியேற்ற முடியாததால், எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் தங்கம் வெற்றிகரமாக நீக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவிலும் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Viral News : 100 கிராம் தங்கத்தை விழுங்கிய 11 வயது சிறுவன்… தீவிர அறுவை சிகிச்சைக்கு பின் நடந்தது என்ன?
வைரல் செய்தி Image Source: Hoppe/picture alliance via Getty Images
barath-murugan
Barath Murugan | Published: 20 Apr 2025 17:08 PM

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் (Gold) என்பது தொட்டுப்பார்க்க முடியாத நிலைமைக்கு அதன் விலை எகிறியுள்ளது. அந்த விதத்தில் இணையத்தில்  சாதாரணமாக சாப்பாடுபோல, தங்கத்தை சிறுவன் ஒருவர் விழுங்கிய (Boy swallowed gold) சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த தகவலின்படி, சீனாவில் (China)  11 வயது சிறுவன் சுமார் 100 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை விழுங்கியுள்ளாராம். அவர் இந்த தங்க கட்டியை சாப்பாடு என்று நினைத்து விழுங்கினாரா என்று தெரியவில்லை. இந்த தங்க கட்டியை விழுங்கிய சிறுவன் சிறிது நாட்களாக கடும் வயிற்று வலியில் அவதிப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதுவரை சாதாரண வயிற்று வலியில் மகன் தவிக்கிறான் என நினைத்த பெற்றோருக்கு, மருத்துவரின் ஸ்கேன் ரிபோர்டில்தான் (Scan report) அதிர்ச்சியான விஷயத்தை பார்த்துள்ளனர்.

இந்த சம்பவமானது சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் (Jiangsu Province)  நடந்துள்ளது. அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த பெற்றோருக்கு அந்த விஷயமானது மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சுமார் 100 கிராம் எடையுள்ள தங்கத்தை, 11 வயது மகன் உணவை போல விழுங்கியுளார் என்று தெரியவந்தது. இந்த அதிர்ச்சியான சம்பவத்தை தொடர்ந்து அந்த தங்க கட்டியை உடலில் இருந்து நீக்குவதற்கு மருத்துவர்கள் பலரும் பல விதமான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தங்கத்தை நீக்க முயற்சி :

வயிற்றில் ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்ட தங்கத்தை, மருத்துவர்கள் இயற்கையாகவே வெளியேற்றுவதற்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அந்த சிறுவனுக்கு பல மருந்துகளையும் கொடுத்துள்ளனர். இயற்கையான முறையில் தங்கத்தை வெளியே எடுப்பதற்கு முயற்சி தோல்விடைந்தது. 2 நாட்களுக்கு பின்னும் ஸ்கேன் செய்தபோதும் தங்கம் வயிற்றியல் அசையாமல் அதே இடத்தில் இருந்துள்ளது. இதன் பிறகு மருத்துவர்கள், சாதாரணமான அறுவை சிகிச்சை முறையை போல இல்லாமல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கி முயற்சி செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சையில் வெற்றியா? தோல்வியா ? :

எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் மூலம், வாய் வழியாக அறுவை சிகிச்சை கருவியை பயன்படுத்தி மருத்துவர்கள் தங்க கட்டியை நீக்குவதற்கு முடிவு செய்திருந்தனர். குடலின் சேதத்தை தடுப்பதற்கு இவ்வாறு முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிட அறுவை சிகிச்சைக்கு பின், எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் தங்கக்கட்டியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

இந்தியாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் :

இந்தியாவிலும் ஆண்டிற்கு பல குழந்தைகள் இதுபோன்று நாணயம், கோலி என திடப்பொருட்களை விழுங்கிய சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதை போல குழந்தைகளுக்கு இதுபோன்ற திட பொருட்களை பெற்றோர் கொடுக்காமல் இருப்பது மிகவும் முக்கியமானது. குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பது பெற்றோரின் கடமையாகும்.

திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...