Viral Video : குழந்தையை போல குளிப்பதற்கு அடம் பிடிக்கும் பாண்டா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Adorable Panda Bath Time | பாண்டாக்கள் பார்ப்பதற்கே மிகவும் அழகான தோற்றம் கொண்டவையாக இருக்கும். இந்த நிலையில், பாண்டா கரடி ஒன்று, குளிப்பதற்கு குழந்தையை போல அடம் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பாண்டா (Panda) கரடிகள் பார்ப்பதற்கு மட்டுமன்றி அவற்றின் செயல்களும் மிகவும் அழகாகவும், வியப்பில் ஆழ்த்தக்கூடியதாகவும் இருக்கும். காரணம் அவை, குழந்தைகளை போலவே சேட்டை செய்யும் சுபாவம் கொண்டவை. சாப்பிட்டுக்கொண்டே தூங்குவது, ஊஞ்சல் விளையாடுவது, சக பாண்டா கரடிகளுடன் சண்டையிடுவது என பாண்டாக்களின் செயல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவையாக இருக்கும். இவ்வாறு பாண்டா கரடிகள் சேட்டை செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பாண்டா கரடி ஒன்று குளிப்பதற்கு அடம் பிடித்து குழந்தை போல் அடம் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குளிப்பதற்கு அடம் பிடிக்கும் பாண்டா கரடி – வைரல் வீடியோ
இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பாண்டா கரடி ஒன்று குளிப்பதற்கு அடம் பிடிக்கிறது. பாதுகாவளர் பெண் ஒருவர் அந்த பாண்டா கரடியை குளிப்பதற்காக தூக்கிச் செல்கிறார். அவர் தூக்க வருவதற்கு முன்பாகவே அவரிடம் இருந்து தப்பித்துச் செல்வதை போல அந்த கரடி எழுந்து ஓடுகிறது. ஆனாலும் அந்த பெண், கரடியை பிடித்து கீழே குளிப்பதற்காக தூக்கிச் செல்கிறார். அவர் கரடியை கீழே தூக்கிச் சென்று இறக்கி விட்டதும், மீண்டும் கரடி கீழே குதித்து ஓடுகிறது. அதனை பார்ப்பதற்கு சிறுபிள்ளைகள் எப்படி குளிப்பதற்காக அடம் பிடிக்குமோ அதே போல தோன்றுகிறது. தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Panda cub tries to escape from being taken to the bath pic.twitter.com/nqi9FqwdU3
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) April 14, 2025
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த பாண்டா அச்சு அசல் அப்படியே குழந்தைகளை போல அடம்பிடிக்கிறது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த பாண்டா அடம் பிடிப்பதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வளவு அழகான வீடியோவை நான் பார்த்ததே இல்லை. இணையத்தில் தற்போது உலா வரும் மிக அழகான வீடியோ இதுதான் என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.