தக்காளிகள் பளபளப்பாக இருக்க கலக்கப்படும் ரசாயனம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!
Vendor Adding Artificial Colour on Tomatoes | உணவு பொருட்கள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றில் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அந்த வகையில், தக்காளிகள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வியாபாரி ஒருவர் அவற்றின் மீது ரசாயனம் தெளிக்கப்படும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
உணவே மருந்து என்ற காலம் மாறி தற்போது மருந்தே உணவு என்று மாறிவிட்டது. உணவு பழக்கத்தில் ஏற்பட்டு மாற்றமே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. காரணம், தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் சாப்பிடும் உணவுகளே அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் மனிதர்கள் மத்தியில் ஃபாஸ்ட் புட் (Fast Food) கலாச்சரம் அதிகரித்து வருகிறது. இது மனிதர்களின் உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அவர்களின் உடலில் பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
உணவு பொருட்களில் கலக்கப்படும் ரசாயனம்
தற்போது பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த ஃபாஸ்ட் புட் உணவுகள் ஆரோக்கியமற்றவையாக கருதப்படுகின்றன. இத்தகை உணவுகளை சாப்பிடும் பட்சத்தில் பல பிரச்னைகள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காரணம், இந்த ஃபாஸ்ட் புட் உணவுகளில் செயற்கை நிறமூட்டிகள் (Artificial Colours) உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. ஃபாஸ்ட் புட் உணவுகளில் மட்டுமன்றி இயற்கை உணவுகளிலும் இந்த சிக்கல் எழுந்துள்ளது. அதாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்களை கவரும் பளிச்சிடும் நிறங்களில் இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றில் ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன.
பெரும்பாலான காய்கறி வியாபாரிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதில்லை என்றாலும் சிலர் மக்களின் உடல்நலத்துடன் விளையாடும் இத்தகைய கொடூர செயல்களை செய்கின்றனர். அந்த வகையில் வியாரி ஒருவர் தக்காளிகள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தக்களிகளில் ரசாயனம் கலக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
பளபளப்பாக இருக்க தக்காளியில் கலக்கப்படும் ரசாயனம்
எந்த ஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்றாலும் அது சிறந்த தரத்துடன் இருப்பது மட்டுமன்றி, அது பார்ப்பதற்கும் சிறந்த தோற்றத்தில் இருக்க வேண்டும் என்ற பிம்பம் உள்ளது. இதன் காரணமாக உணவு பொருட்களில் செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், வியாபாரி ஒருவர் பழுக்காத தக்காளிகளை எடுத்து இளம் சிவப்பு நிறத்தில் உள்ள ஒரு திரவத்தில் நனைத்து எடுக்கிறார்.
தக்காளிகள் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இது மனித உயிர்களுக்கு தீங்கிழைக்கும் செயல் என்றும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.