
Weather Forecast
காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதீத மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, ஜம்மு காஷ்மீரில் வெயில் என்பதை பார்க்கவே முடியாது. அதே நேரத்தில் சென்னையை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, அந்தந்த இடத்திற்கு ஏற்ப வானிலை என்பது இருக்கும். இதற்கு காரணம் வளிமண்டலத்தின் நடக்கும் மாற்றம் தான். வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றங்கள் காரணமாக, கனமழையும், அதீ கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெயில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவமழையும் இருக்கும். இதற்கிடையில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதனால், அதற்கு ஏற்றவாறு வானிலை அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. எனவே, வானிலை தொடர்பான அறிவிப்புகளை இங்கு தொடர்ந்து பதிவிடப்படும். இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
Tamil Nadu Heatwave: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! போட்டுத்தாக்க தொடங்கிய வெயில்.. அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி..?
Tamil Nadu weather update: தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கம் அதிகரித்துள்ளது. வேலூர் மற்றும் மதுரையில் 104°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அறிவிப்பு தெரிவிக்கிறது. வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.
- Mukesh Kannan
- Updated on: Apr 20, 2025
- 20:33 pm
கொளுத்தி எடுக்கும் வெயில்.. இன்னும் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மேற்கு திசை காற்று காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Apr 20, 2025
- 06:16 am
அடுத்த 2 நாட்கள்.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் அலர்ட்!
tamil nadu weather alert: தமிழக்ததில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Apr 19, 2025
- 06:37 am
Weather Alert: இடி, மின்னலுடன் மழை இருக்கும்… எங்கெங்கு பெய்யும் தெரியுமா..?
Rain Warning: தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளதுடன், வெப்பநிலை 2–3°C உயர்வு காணப்படுகிறது; புதுச்சேரி மற்றும் காரைக்கால் வறண்டவையாகவே உள்ளன. 2025 ஏப்ரல் 18 முதல் 24 வரை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Sivasankari Bose
- Updated on: Apr 18, 2025
- 14:03 pm
அடுத்த 5 நாட்கள்.. பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Chennai Weather Update : சென்னையில் 2025 ஏப்ரல் 18ஆம் தேதியான இன்று ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Apr 18, 2025
- 06:09 am
தமிழகத்தில் 7 நாளுக்கு வெளுக்கும் மழை.. சென்னை நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்!
Tamil Nadu Weather Alert : கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Apr 17, 2025
- 14:33 pm