
Vastu Tips
வாஸ்து குறிப்புகள்
சாஸ்திரங்களைப் பொறுத்தவரை வாஸ்து சாஸ்திரம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. வாஸ்து என்பது கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தை குறிக்கும் சொல்லாகும். வாஸ்து சாஸ்திரம் என்றால் ஒரு நிலத்தில் எந்த வகையான கட்டடமாக இருந்தாலும் சரி, அது எப்படி கட்டப்பட வேண்டும், அங்கு எந்த இடத்தில் என்ன அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகும். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களிடையே வாஸ்துவில் மிகப்பெரிய சக்தி அடங்கியிருப்பதாக நம்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 4 வேதங்களில் கடைசியாக உள்ள அதர்வணத்தில் வாஸ்து சாஸ்திரம் பற்றி கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு கட்டடத்தை வெறும் உயிரற்ற பொருளாக கருதுவதில்லை. மாறாக அது மனிதர்களுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. நாம் இந்த தொகுப்பில் வாஸ்து சாஸ்திரம் பற்றிய தகவல்களை காணலாம்.
Vastu Tips: வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? – வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்!
வாஸ்து சாஸ்திரம் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து செல்வம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெற உதவும் என சொல்லப்படுகிறது. முன் வாசலை சுத்தமாக வைத்திருப்பது, தினமும் விளக்கு ஏற்றுவது, குளியலறையில் சிறிது தண்ணீர் வைத்திருப்பது, கற்பூரம் ஏற்றுவது போன்றவை நல்ல பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 18, 2025
- 23:18 pm
Vastu Tips: எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆடைகள்.. எந்த நிறத்தில் அணியலாம்?
வாஸ்து சாஸ்திரம் ஆடை அணியும் முறையிலும் வாழ்க்கையின் சிறப்பான சம்பவங்கள் நடைபெறும் என நம்பப்படுகிறது. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் புதிய ஆடைகள் வாங்குவது நல்லது. சுத்தமான ஆடைகள் நேர்மறை ஆற்றலைத் தரும் என சொல்லப்படுகிறது. அப்படியாக ஆடை தொடர்பான தகவல்களை நாம் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 11, 2025
- 21:23 pm
Vastu Tips: சிறந்த கார் பராமரிப்புக்கான வாஸ்து டிப்ஸ் இதோ!
கார் வாஸ்து சாஸ்திரம், வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளை மேம்படுத்த உதவும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கிழக்கு அல்லது வடக்கு திசையில் உங்களுடைய காரை நிறுத்துவது நல்லது எனவும் சொல்லப்படுகிறது. மேலும் காரின் உட்புறத்தை சுத்தமாகவும், வெப்பநிலையை சரியாகவும் பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 9, 2025
- 19:39 pm
Vastu Tips: வீட்டில் சீரான நிதி நிலைமை இருக்க வேண்டுமா? – வாஸ்து டிப்ஸ் இதோ!
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் வடகிழக்கு மூலையை நேர்மறை ஆற்றலுக்கான இடமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அங்கு குபேர இயந்திரம் அல்லது கண்ணாடி வைப்பதாலும், தென்மேற்கு திசையில் நிதி ஆவணங்களை வைத்தாலும் செல்வச் செழிப்பை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இதுதொடர்பான சில தகவல்களைக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 7, 2025
- 18:10 pm
Vastu Tips: வீட்டில் ஆரோக்கியம் நிலைக்க வேண்டுமா? – வாஸ்து டிப்ஸ் என்ன?
வாஸ்து சாஸ்திரம் நம் வாழ்வில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வீட்டில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்க உதவும். வடகிழக்கு திசையை சுத்தமாக வைத்திருப்பது, துளசி, கற்றாழை போன்ற செடிகளை வளர்ப்பது, கல் உப்பு வைப்பது போன்றவை நன்மைகளைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 7, 2025
- 18:11 pm
Vastu Tips: ஆபீஸ் ஆரம்பிக்க போறீங்களா?.. வாஸ்துப்படி என்ன செய்யலாம் பாருங்க!
வாஸ்து சாஸ்திர குறிப்புககளில் அலுவலகத்தை அமைப்பது, கணக்காளர்களின் இருக்கை அமைப்பு, நிதி உள்ளிட்ட ஆவணங்களை வைக்கும் இடம், மேசை அமைப்பு மற்றும் அலுவலக சுற்றுச்சூழல் ஆகியவற்றை சரியான முறையில் அமைப்பதன் மூலம் நிதி வளர்ச்சி இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 8, 2025
- 16:16 pm
Vastu Tips: வீட்டில் பூஜையறை.. வாஸ்துப்படி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
ஒரு வீட்டின் நேர்மறை ஆற்றலுக்கான மையமாகப் பூஜை அறை உள்ளது. வாஸ்துப்படி, வடகிழக்கு பகுதி சிறந்த இடமாக கருதப்படுகிறது. அதேபோல் அங்கு வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் சிலைகள் ஒன்றையொன்று நோக்கி அல்லது சுவரை ஒட்டியும் வைக்கக் கூடாது. இதுதொடர்பான விஷயங்களை காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 7, 2025
- 21:19 pm
வீட்டின் ஆரோக்கியம்.. சமையலறையில் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
Vastu Tips In Tamil: சமையலறை வாஸ்து, வீட்டின் நல்வாழ்வு மற்றும் செழிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்கிழக்கு மூலையில் அமைக்கப்படும் சமையலறையில் போதுமான வெளிச்சம், காற்றோட்டம் என்பது மிகவும் அவசியமாகும். பொதுவாக ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் அதில் தென்கிழக்கு மூலைப்பகுதி அக்னிக்கு உரிய திசையாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 7, 2025
- 21:20 pm
Vastu Tips: புது வீடு கட்டுறீங்களா.. பார்க்க வேண்டிய வாஸ்து டிப்ஸ் என்னென்ன?
வாஸ்து சாஸ்திரம் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு கட்டுவதற்கு முன்பு வீதி சூலம், நீர் வளம், பிரதான கதவு திசை, வரவேற்பு அறை, மாஸ்டர் பெட்ரூம், சமையலறை, பூஜை அறை மற்றும் குளியலறை அமைவிடங்களை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 7, 2025
- 18:12 pm
எந்த விரலில் தங்க மோதிரம் அணிவது நல்லது? ஆன்மிக நம்பிக்கை சொல்வது இதுதான்!
Gold Ring Benefits Astrology : தங்க மோதிரம் அணிவதால் பல நன்மைகள் உண்டு என ஜோதிடம் கூறுகிறது. சூரியனின் சக்தியை அதிகரிக்கவும், மன உறுதியை வளர்க்கவும் இது உதவும். ஆனால், எந்த விரலில் அணிய வேண்டும் என்பது முக்கியம். எந்த விரலில் மோதிரம் அணிவது நல்லது என்பதை பார்க்கலாம்
- C Murugadoss
- Updated on: Apr 7, 2025
- 18:13 pm