
IPL
இந்தியன் பிரீமியர் லீக் என்பது ஒரு தொழில்முறை ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் போட்டியாகும். இது இந்தியாவில் இருக்கும் 10 முக்கிய நகரங்களில் இருந்து பத்து அணிகள் களமிறங்கி விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும். கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் தொடர்பான அறிவிப்பை இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கி தற்போது 18வது சீசனை எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் என்பது மிக முக்கியமானது. இந்த வருடத்துக்கான ஐபிஎல் ஏற்கெனவே தொடங்கி முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கோடைக்காலத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. தங்களுக்கு பிடித்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் தங்களது முழு ஆதவரையும் அளித்து வருகின்றனர். இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் போட்டி தொடங்கிய நாள் முதலே இருந்து வருகிறது. மாற்றங்களுடன் பல உலக சாதனைகளும் அரங்கேறி வருகிறது. தினம் தினம் நடக்கும் ஐபிஎல் ஆட்டங்களில் அப்டேட்களை இங்கு படிக்கலாம்
IPL 2025: தோல்வியில் இருந்து மீளுமா ராஜஸ்தான்..? தாக்குதல் தொடுக்குமா டெல்லி..? வானிலை நிலவரம்!
Delhi Capitals vs Rajasthan Royals: ஐபிஎல் 2025 இன் 32வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான வானிலை நிலவும். இரு அணிகளின் கடந்தகால சாதனைகள் மற்றும் சாத்தியமான பிளேயிங் லெவன்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
- Mukesh Kannan
- Updated on: Apr 16, 2025
- 10:56 am
PBKS vs KKR: சக்கரவியூகம் அமைத்த சாஹல்.. சிக்கி சிதைத்த கொல்கத்தா அணி.. 95 ரன்களுக்குள் சுருண்ட சோகம்!
Punjab Kings Shock KKR: ஐபிஎல் 2025ன் 31வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பஞ்சாப், 112 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தாவை 95 ரன்களில் சுருட்டியது. யுஸ்வேந்திர சஹாலின் அபார பந்துவீச்சு கொல்கத்தா அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
- Mukesh Kannan
- Updated on: Apr 16, 2025
- 08:14 am
MS Dhoni Injury: காயத்தால் அவதிப்படும் தோனி.. மும்பை அணிக்கு எதிராக களமிறங்கமாட்டாரா..?
Injury scare for MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கனவே காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகியுள்ளார். இந்தநிலையில், தற்போதைய சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனியும் காயத்தால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Apr 15, 2025
- 19:33 pm
IPL 2025: பழைய அணிக்கு எதிராக ஷ்ரேயாஸ் களம்! கொல்கத்தாவை வீழ்த்துமா பஞ்சாப்..? வானிலை நிலவரம்!
PBKS vs KKR Match 31 Preview: ஐபிஎல் 2025ன் 31வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், பஞ்சாப் அணியின் சாதனை மிகவும் சிறப்பாக இல்லை. இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் போட்டியிடுகின்றன. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் இருப்பதால் அதிக ஸ்கோர் எதிர்பார்க்கப்படுகிறது.
- Mukesh Kannan
- Updated on: Apr 15, 2025
- 11:43 am
LSG vs CSK: பினிஷர் தோனி இஸ் பேக்.. முடித்து கொடுத்த துபே.. லக்னோவை வீழ்த்திய சென்னை கலக்கல்..!
Chennai Super Kings: ஐபிஎல் 2025ன் 30வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 166 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், 167 ரன்கள் இலக்கை துரத்தி, தோனியின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பாக ஆடினார்கள். இறுதி ஓவர்களில் தோனியின் அதிரடி ஆட்டம் வெற்றிக்குக் காரணமானது.
- Mukesh Kannan
- Updated on: Apr 14, 2025
- 23:34 pm
IPL 2025 Robot Dog: உலக கிரிக்கெட் ஆச்சர்யம்! ஐபிஎல்லில் அறிமுகமான ரோபா நாய்.. புதிய வளர்ச்சியை கொண்டு வந்த பிசிசிஐ..
IPL Broadcast Technology: 2025 ஐபிஎல் தொடரில் புதிய தொழில்நுட்ப அறிமுகமாக, ஒரு ரோபோ நாய் ஒளிபரப்பு குழுவில் இணைந்துள்ளது. இது பல்வேறு கோணங்களில் போட்டியை பதிவு செய்யும். டெல்லி-மும்பை போட்டியின் போது வீரர்களுடன் விளையாடிய இந்த ரோபோ நாயின் செயல்பாடு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் ரசிகர்களிடம் இந்த ரோபோ நாய்க்குப் பெயர் சூட்டும்படி கேட்டுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Apr 14, 2025
- 19:16 pm
IPL 2025: உள்ளே வந்த ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஷாக்! சட்டென அம்பயர் செய்த செயல்.. மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி!
Hardik Pandya's Bat Inspection: ஐபிஎல் 2025ன் 29வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பேட் நடுவர்களால் சோதனை செய்யப்பட்டது, இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஐபிஎல் விதிகளின்படி, பேட்டின் அளவுகள் சரிபார்க்கப்படுகின்றன. மேலும், ஹர்திக் பாண்டியாவின் பேட் விதிகளுக்கு உட்பட்டே இருந்தது.
- Mukesh Kannan
- Updated on: Apr 14, 2025
- 17:29 pm
Rohit Sharma: ரோஹித்தை கேப்டனாக்குங்கள்.. கோயில் வந்த நீதா அம்பானியிடம் ரசிகர் கோரிக்கை! வைரலாகும் வீடியோ..!
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான செயல்பாட்டால், ரசிகர்கள் ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஒரு ரசிகர் நீதா அம்பானியிடம் நேரடியாக இந்தக் கோரிக்கையை வைத்ததும் வைரலாகி உள்ளது. 2024ல் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா கேப்டனான பின், அணியின் வெற்றி விகிதம் குறைந்துள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Apr 14, 2025
- 15:31 pm
IPL 2025: தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை..? தோனியை லாக் செய்யும் லக்னோ? ஆடுகளம் விவரம்!
LSG vs CSK IPL 2025 Match 30 Preview : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று, ஏப்ரல் 14, 2025 அன்று ஐபிஎல் 2025ன் 30வது போட்டியில் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், லக்னோ 4வது இடத்திலும், சென்னை 10வது இடத்திலும் உள்ளது. ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குகிறது.
- Mukesh Kannan
- Updated on: Apr 14, 2025
- 11:23 am
ஐபிஎல் 2025 புள்ளி பட்டியல்.. யார் டாப்? சென்னை நிலைமை என்ன?
IPL 2025 : ஐபிஎல் 2025ல், மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸை தோற்கடித்தால் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி இரண்டாவது இடத்திற்குச் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டிகளின் விளைவாக புள்ளிகள் பட்டியலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
- C Murugadoss
- Updated on: Apr 14, 2025
- 08:58 am
DC vs MI: 3 ரன் அவுட்டில் முடிந்த டெல்லி கதை.. கடைசி நேரத்தில் கலக்கி மும்பை வெற்றி..!
IPL 2025 Match 29: மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. திலக் வர்மா 59 ரன்களுடன் மும்பை அணியின் சிறந்த ஆட்டக்காரராகத் திகழ்ந்தார். டெல்லி அணி சார்பில் கருண் நாயர் 89 ரன்கள் எடுத்தார் என்றாலும், அவரது அரைசதம் போதவில்லை. இறுதி ஓவர்களில் மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி பெற்றனர்.
- Mukesh Kannan
- Updated on: Apr 13, 2025
- 23:32 pm
Virat Kohli’s 100th T20 Fifty: டி20யில் 100 அரைசதம்! உலகத்தை மிரள வைத்த விராட் கோலி.. முதல் இந்தியர் என்ற சாதனை!
Virat Kohli Achieves 100 T20 Half-Centuries: விராட் கோலி ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 100வது டி20 அரைசதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இது டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட அரைசதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. மேலும், ஐபிஎல்லில் அதிக அரைசதங்கள் (66) அடித்த வீரர்களில் முதலிடத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார்.
- Mukesh Kannan
- Updated on: Apr 13, 2025
- 21:03 pm
RR vs RCB: சால்ட் செய்த சம்பவம்.. விரட்டிய விராட் கோலி.. ராஜஸ்தானை எளிதாக வீழ்த்திய பெங்களூரு!
IPL 2025: ஐபிஎல் 2025 இன் 28வது போட்டியில், பெங்களூரு அணி ராஜஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் அணி 173 ரன்கள் எடுத்தது, அதேசமயம் விராட் கோலி (62) மற்றும் பில் சால்ட் (65) ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தால் பெங்களூரு அணி எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணியின் வெற்றி வரிசை தொடர்கிறது.
- Mukesh Kannan
- Updated on: Apr 13, 2025
- 20:16 pm
Viral Video: கடந்த மாதம் கொடுத்த வாக்குறுதி! கிரிக்கெட் வீராங்கனைக்கு பரிசு கொடுத்த ஹர்திக் பாண்டியா! கொண்டாடும் ரசிகர்கள்..!
Kashvee Gautam's Dream Come True: ஹர்திக் பாண்டியா, WPL போட்டியின் போது காஷ்வி கௌதமுக்கு பேட் பரிசு அளிப்பதாக உறுதியளித்தார். காஷ்வி இந்திய அணிக்கு தேர்வான பின்னர், ஹர்திக் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஷ்வியின் சிறப்பான ஆட்டமும், ஹர்திக்கின் அற்புதமான செயலும் இணையத்தில் ரசிகர்களால் பாராட்டப்படுகின்றன.
- Mukesh Kannan
- Updated on: Apr 13, 2025
- 17:57 pm
Shreyas Iyer DRS Controversy: என்ன கேட்காம DRS எப்படி எடுப்பீங்க..? அம்பயரிடம் பொங்கிய ஷ்ரேயாஸ் ஐயர்.. என்ன நடந்தது?
Shreyas Iyer DRS Controversy: ஐபிஎல் 2025ல் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில், ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் 245 ரன்கள் எடுத்த நிலையில், ஹைதராபாத் அபிஷேக் சர்மாவின் 141 ரன்கள் உதவியுடன் இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில், DRS முறையீட்டின் போது ஷ்ரேயாஸ் ஐயர் நடுவர் மீது கோபம் கொண்ட சம்பவமும் நடந்தது. இறுதியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
- Mukesh Kannan
- Updated on: Apr 13, 2025
- 15:51 pm