
சி.பி. ராதாகிருஷ்ணன் (C.P. Radhakrishnan)
சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையிலிருந்து இரண்டு முறை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேலும் ஏ.பி வாஜ்பாய் மற்றும் எல்.கே அத்வானி ஆகியோரின் கீழ் பணியாற்றிய பாஜகவின் பழைய தலைவர்களில் ஒருவர் ஆவார். தமிழ்நாட்டில் திருப்பூரில் அக்டோபர் 20, 1957ஆம் ஆண்டு பிறந்த ராதாகிருஷ்ணன் 1970களில் ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்தார். பின்னர் 1974 பாரதிய ஜனதா சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார். 2024 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் இருந்து போட்டியிட்ட அண்ணாமலை போன்ற தலைவர்களுக்கு வழிவகுக்கும் வகையில் அவர் 2023 ஆம் ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
நாட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பல மாநிலங்களின் முதலமைச்சர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் கலந்து கொண்டார்
- C Murugadoss
- Updated on: Sep 12, 2025
- 13:31 pm IST
Vice President C.P. Radhakrishnan: 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்..
Vice President C.P. Radhakrishnan: நாட்டின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெற்ற நிலையில், 452 வாக்குகள் பெற்று சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்நிலையில் செப்டம்பர் 12, 2025 தேதியான இன்று அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 12, 2025
- 10:36 am IST
நாட்டின் 15வது துணை ஜனாதிபதி.. சி.பி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு..
Vice President Of India: சி. பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக இன்று அதாவது செப்டம்பர் 12, 2025 தேதியான இன்று பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 12, 2025
- 10:53 am IST
C. P. Radhakrishnan : ‘அவருதான் ஜெயிக்கணும்’ – சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக சிறப்பு பூஜையில் சொந்த ஊர் மக்கள்
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதியான இன்று நடந்து வருகிறது. NDA சிபி ராதாகிருஷ்ணனை பரிந்துரைத்துள்ளது, அதே நேரத்தில் INDIA கூட்டணி பி சுதர்சன் ரெட்டியை பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டிய திருப்பூரில் இருக்கும் அவரது சொந்த ஊரில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது
- C Murugadoss
- Updated on: Sep 9, 2025
- 13:14 pm IST
நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்? இன்று தேர்தல்.. முடிவு எப்போது?
Vice President Election: துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து செப்டம்பர் 9, 2025 தேதியான இன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் முடிவுகள் இன்று மாலையே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 9, 2025
- 07:04 am IST
பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன்.. தேர்வு செய்ய என்ன காரணம்?
BJP Vice President Candidate: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சி.பி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அவருக்கும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் அதிகாரம் அளித்தனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 5, 2025
- 18:51 pm IST
தமிழ்நாடு குறியா? சி.பி. ராதாகிருஷ்ணனை தேர்வு செய்தது ஏன்? உண்மையை உடைத்த அமித் ஷா!
India 2025 VP Election : துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் DA கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் வருவதே இந்த தேர்வுக்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்
- C Murugadoss
- Updated on: Aug 25, 2025
- 13:08 pm IST
துணை ஜனாதிபதிக்கு சரியான தேர்வு சுதர்சன் ரெட்டி தான் – முதல்வர் ஸ்டாலின் உறுதி..
Tamil Nadu CM MK Stalin: இந்திய நாட்டின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்தியக் கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வருகை தந்து தமொழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 24, 2025
- 21:37 pm IST
டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்து பெற டெல்லி சென்றார். இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- Karthikeyan S
- Updated on: Aug 18, 2025
- 23:58 pm IST
பிரதமர் மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்..
C.P. Radhakrishnan Meets PM Modi: இந்திய நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9, 2025 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 18, 2025
- 20:32 pm IST
Vice President Election Date: நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல்.. எப்போது? வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் முடிவு.. முழு விவரம்..
Vice President Election: நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் 2025, செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வாக்குப்பதிவு நடைப்பெறும் அதே நாளில் முடிவுகளும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 18, 2025
- 17:07 pm IST
CP Radhakrishnan : இதுதான் சி.பி.ராதாகிருஷ்ணன் வீடு.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல் நிலை சிக்கல் காரணமாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், பாஜக கூட்டணியில், துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- C Murugadoss
- Updated on: Aug 18, 2025
- 16:17 pm IST
துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்.. அன்புமணி ராமதாஸ் ஆதரவு..
Anbumani Support To C.P Radhakrishnan: இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், குடியரசு துணைத் தலைவர் பதிவுக்கு அவர் சரியான தேர்வு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 18, 2025
- 16:34 pm IST
சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இந்தியக் கூட்டணி? முதல்வர் ஸ்டாலினிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..
Vice President Election: துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும்படி பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 18, 2025
- 16:37 pm IST
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்.. திமுகவுக்கு எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல்!
Vice President Election: தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தமிழக பாஜகவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவரை நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.,க்கள் ஆதரிப்பாளர்களா, எதிர்ப்பாளர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Aug 18, 2025
- 16:41 pm IST