இனி உங்க டேட்டாவை யாரும் திருட முடியாது! – ஆண்ட்ராய்டு போனின் புதிய அப்டேட்!

Android Phone Security Alert: தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் நம்மை பற்றிய அனைத்து தகவல்களும் ஸ்மார்ட்போனில் இருக்கின்றன. இதனையடுத்து ஸ்மார்ட்போன்களின் டேட்டாக்களை பாதுகாப்பது அவசியமாகிறது. இதை உணர்ந்த Google, ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள டேட்டாக்களை பாதுகாக்கும் விதமாக புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி உங்க டேட்டாவை யாரும் திருட முடியாது! - ஆண்ட்ராய்டு போனின் புதிய அப்டேட்!

மாதிரி புகைப்படம்

Published: 

17 Apr 2025 18:40 PM

ஆண்ட்ராய்டு (Android) போன்கள் விலை மற்றும் அது அளிக்கும் வசதிகளால் எளிய மக்களின் தேர்வாக இருந்து வருகிறது. ஆண்ட்ராய்டு போன்களை அதன் விலைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க முடியும். இந்தியாவின் மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை ஆண்ட்ராய்டு போன்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு போன்கள் குறந்தது ரூ. 5000 முதல் பல லட்சங்கள் வரை அதன் தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது. மேலும் பல பிராண்டுகள் இருப்பதால் நமது விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். மேலும் போன்களின் செயல்பாட்டை விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மூலம் நம் விருப்பப்பட்ட ஆப்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். கல்லூரி மாணவர் முதல் ஐடி ஊழியர் வரை அனைவரது தேவைகளையும் ஆண்ட்ராய்டு போன் பூர்த்தி செய்கிறது.

ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிளாட்ஃபார்ம் என்பதால் பிளே ஸ்டோர் மற்றும் பிற வழிகளிலும் ஆப்களை டவுன்லோடு செய்துகொள்ள முடியும். இதனால் மால்வேர் போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் தற்போது கூகுள் பிளே புரொடக்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் புதிய ஆப்களை டவுன்லோடு செய்யும் முன் நாமும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

ஆண்ட்ராய்டு போனுக்கான ஸ்பெஷல் அப்டேட்

இந்த நிலையில் கூகுள் தனது புதிய பாதுகாப்பு அம்சமாக, பிளே சர்வீசஸ் 25.14 என்ற அப்டேட்டில் ஒரு சிறப்பான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி ஆண்ட்ராய்டு போன் 72 மணி நேரம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அது தானாகவே ரீஸ்டார்ட் ஆகும். ரீஸ்டார்ட் ஆன பிறகு அது தானாகவே ஹை செக்யூரிட்டி மோடிற்கு சென்று விடும். இதனையடுத்து பாஸ்வேர்டு மூலம் மட்டுமே போனை அன்லாக் செய்ய முடியும். மேலும் ஃபிங்கர்பிரின்ட், ஃபேஸ் அன்லாக் போன்ற பயோமெட்ரிக் முறைகள் முடக்கப்படும். இதனால் உங்கள் தகவல்கள் எந்தவிதமான அபயாமும் இல்லாமல் பாதுகாக்கப்படும்.

மீண்டும் அன்லாக் செய்வது எப்படி?

நாம் மீண்டும் பாஸ்வேர்ட் போட்டு போனை அன்லாக் செய்தால் மட்டுமே மற்ற எல்லா அம்சங்களும் மீண்டும் இயங்கும். தற்போதைய நிலையில் நமது விருப்பத்துக்கு ஏற்ப இந்த ஆப்சனை தேர்வுசெய்துகொள்ளலாம். இதனால் உங்கள் போன் ஒருவேளை திருடப்பட்டால் பாஸ்வேர்டு இல்லாமல் யாராலும் பயன்படுத்த முடியாது. அதனால் உங்கள் போனை தவறாக பயன்படுத்துவதையும், போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்படுவதையும் தடுக்க முடியும்.

ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய பாதுகாப்பு அம்சம், நம்முடைய தனிப்பட்ட தகவல்களை மேலும் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. மூன்று நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், இந்த சாதனம் தானாகவே ரீஸ்டார்ட் ஆகி, பாஸ்வேர்டு உள்ளீடு செய்யும் வரை எந்தவொரு தகவலையும் பெற முடியாத பாதுகாப்பு சூழலை உருவாக்குகிறது. இது போன்கள் தொலைந்து போனாலும், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், தகவல் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதைக் காட்டும் இது போன்ற அம்சங்கள், பயனர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தையும், பாதுகாப்பான சூழலையும் வழங்குகின்றன.