கூகுளில் எந்த காரணம் கொண்டும் இந்த 2 விஷயங்கள் குறித்து தேடவே கூடாது.. மீறினால் சிறை செல்ல நேரிடும்!
Offensive Google Search | கூகுளின் தேடுபொறியை பயன்படுத்தி எந்த விதமான தகவல்களையும் நொடி பொழுதில் தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால், எந்த வித காரணம் கொண்டும் சில தலைப்புகள் குறித்து தேடவே கூடாது என கூறப்படுகிறது. இந்த நிலையில், எந்த எந்த தலைப்புகள் குறித்து கூகுளில் தேட கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் (Technology Development) எந்த ஒரு விஷயம் என்றாலும் அதனை மிக விரைவாக செய்து முடித்துவிட முடியும். குறிப்பாக தகவல் பரிமாற்றம் (Communication) நொடி பொழுதில் நிகழ இது வாய்ப்பை வழங்குகிறது. தொழில்நுட்பத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுவது தேடுபொறிகள் (Search Engines) தான். காரணம் தேடுபொறிகள் நொடி பொழுதில் தகவல்களை வழங்குகின்றன.
உலக மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் கூகுள் தேடுபொறி
முன்பெல்லாம் ஏதேனும் ஒரு விஷயம் குறித்த தகவலை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் அந்த துறை சார்ந்த நிபுணர்கள், புத்தகங்களை உதவிக்கு நாட வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் அதற்கு கவலையே இல்லை. எந்த ஒரு தகவல் என்றாலும் அதனை மிக சுலபமாக தேடுபொறிகள் மூலம் தேடி விடையை கண்டுபிடித்துவிடலாம். உலக அளவில் பல தேடுபொறிகள் இருந்தாலும், கூகுள் (Google) தேடுபொறி தான் மிகவும் பிரபலமானதாக உள்ளது.
கூகுள் நிறுவனம் பல சேவைகளை வழங்கி வருகிறது. அதில் முதன்மையானது என்றால் அது கூகுளின் தேடுபொறி தான். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இந்த கூகுள் தேடுபொறியை பயன்படுத்துகின்றனர். கூகுளில் பல தகவல்கள் குறித்து தேடப்பட்டாலும், எந்த காரணம் கொண்டு சில தலைப்புகள் குறித்து தேட கூடாது என கூறப்படுகிறது. ஒருவேளை அந்த தலைப்புகள் குறித்து தேடும் பட்சத்தில் சிறை தண்டனை கூட வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கூகுளில் எந்த காரணம் கொண்டும் தேட கூடாத விஷயங்கள்
கூகுளில் இந்த இரண்டு தலைப்புகள் குறித்து தேடுவது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படுகிறது. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வெடிகுண்டு தயாரிப்பு
கூகுள் தேடுபொறியில் எந்த காரணம் கொண்டும் வெடிகுண்டு தயாரிப்பது குறித்து தேடவே கூடாது. அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. ஒருவேளை யாரேனும் இவ்வாறு வெடிகுண்டு தயாரிப்பது குறித்து கூகுளில் தேடினால் அந்த நபரின் கணினி அல்லது ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும். அதுமட்டுமன்றி, இந்த தேடுதலை மேற்கொண்ட நபர் மீது தீவிர கண்காணிப்பு தேவைப்படும் பட்சத்தில் அந்த நபர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
குழந்தைகளின் ஆபாச படங்கள்
குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது எத்தகைய தண்டனைக்குறிய குற்றமோ அதே அளவுக்கு குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் குறித்து தேடுவதும் தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது, இணையத்தில் தேடுவது, நண்பர்களுக்கு ஷேர் செய்வது, மொபைல் அல்லது கணினியில் அத்தகைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருப்பதும் குற்றம் ஆகும்.
இத்தகைய குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமன்றி, இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.