Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : வாட்ஸ்அப் Sticker-ல் வந்த புதிய அம்சம்.. என்ன தெரியுமா?

WhatsApp's New Sticker Pack Feature | வாட்ஸ்அப் செயலியில் பல அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஸ்டிக்கர் அனுப்பும் அம்சம். இதன் மூலம் உரையாடலை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்ற முடியும். இந்த நிலையில், வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சத்தில் புதிய அம்சம் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

WhatsApp : வாட்ஸ்அப் Sticker-ல் வந்த புதிய அம்சம்.. என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 19 Apr 2025 21:25 PM

தொழில்நுட்ப வளர்ச்சி (Technology Development) காரணமாக பொதுமக்கள் மத்தியில் சமூக ஊடக செயலிகளின் (Social Media Apps) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னதான் பல புதிய செயலிகள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த செயலியாக உள்ளது மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) தான். இந்த செயலியை உலகமும் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால் இது பலருக்கும் பிடித்த செயலியாக உள்ளது.

வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் செயலியில் தொலைத்தொடர்பு முதல் பொழுதுபோக்கு வரை என பல்வேறு சிறப்பு அம்சங்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாகவே பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், வாட்ஸ்அப் செயலி மூலம் குறுஞ்செய்தி, வீடியோ கால், ஆடியோ கால், ஆவண பரிமாற்றம் உள்ளிட்டவற்றை மிக சுலபமாக செய்ய முடியும். ஏற்கனவே இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலியில் அந்த நிறுவனம் மேலும் சில சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்டிக்கர் பேக் அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

பயனர்கள் வாட்ஸ்அப்பில் தங்களது நண்பர்கள் உடன் உரையாடும்போது சுவாரஸ்யத்தை அளிக்கும் வகையில் பயன்பாட்டில் உள்ளது தான் இந்த ஸ்டிக்கர் (Sticker) அம்சம். இந்த அம்சம் மூலம் ஏதேனும் உருவங்கள் அல்லது புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பிக்கொள்ளலாம். முன்னதாக ஸ்டிக்கர்களை உருவாக்க வேறு செயலியை பயன்படுத்த தேவை இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பிலே ஸ்டிக்கர்களை உருவாக்கும் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது அதில் மேலும் சில மாற்றங்களை செய்து வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

அதாவது வாட்ஸ்அப்பில் பயனபடுத்தும் ஸ்டிக்கர்களை தனித்தனி பிரிவுகளாக பிரித்து சேகரித்து வைப்பதற்கும், அவற்றை மொத்தமாக தங்களது நண்பர்களுக்கு அனுப்ப உதவும் ஸ்டிக்கர் பேக் சிறப்பு அம்சம் தான் அது. உதாரணமாக யாரேனும் ஒருவரின் புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர்களை நீங்கள் அதிகம் வைத்துள்ளீர்கள் என்றால் அதனை அவர்களின் பெயரில் மொத்தமாக சேவ் செய்து வைத்துக்கொள்ள இந்த அம்சம் அனுமதி வழங்குகிறது. அதுமட்டுமன்றி அந்த ஸ்டிக்கர்களை மொத்தமாக வேறு ஒருவருக்கு அனுப்ப இது வாய்ப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...