Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப்பின் புதிய மொழிபெயர்ப்பு வசதி – இது எப்படி வேலை செய்யும்?

New WhatsApp Translation Feature: வாட்ஸ்அப் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள மெசேஜ் மொழிபெயர்ப்பு அம்சம், மொழி தடைகளை கடந்து தகவல்களை தெளிவாகப் பெற வழிவகுக்கிறது. எந்தெந்த மொழிகளில் தற்போது கிடைக்கும்? இது எப்படி வேலை செய்யும்? ஆகியவை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பின் புதிய மொழிபெயர்ப்பு வசதி – இது எப்படி வேலை செய்யும்?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 21 Apr 2025 17:15 PM

உலகின் முன்னணி மெசேஜிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப், அதன் பயனர்களுக்காக புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தகவல் அனுப்பும் விதத்தில் எளிமையையும் பாதுகாப்பையும் அளிக்கும் வாட்ஸ்அப், தற்போது புதிய மொழிபெயர்ப்பு அம்சத்தை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வேலை சார்ந்து உலகில் உள்ள பல்வேறு மொழியினருடன் தொடர்புகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த நிலையில் வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம், பல மொழிகளை பேசும் மக்களுக்கு இடையிலான தொடர்பை மேலும் எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வாட்ஸ்அப்பில் நேரடியாக செயல்படும் இந்த வசதி, இனி மொழி தடைகளை கடந்து உரையாட உதவும்.

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

என்டிடிவியின் கேட்ஜெட் 360 வெளியிட்டுள்ள செய்தியின் படி, வாட்ஸ்அப் தற்போது அதன் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் புதிய மொழிபெயர்ப்பு அம்சத்தை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த புதிய அம்சம், ஒரு உரையாடலுக்குள் வரும் செய்திகளை, பயனர்களின் சாதனத்தில் நேரடியாக மொழிபெயர்க்கும் வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப்பில் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் (End-to-End Encryption) செயல்படுவதால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த மொழிபெயர்ப்பு அம்சம் நேரடியாக பயனர்களின் ஸ்மார்ட்போன்கள் மூலம் செயல்படுத்தும்.

எப்படி வேலை செய்யும்?

வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.25.12.25 என்ற அப்டேட் செய்த பீட்டா பயனர்களுக்கு, புதிய Translate Messages எனும் அமைப்பை தேர்வு செய்யும் வசதியை அளிக்கிறது. இது, ஒவ்வொரு உரையாடலுக்கும் உள்ள Chat Lock அமைப்புக்குள் Toggle வடிவில் தோன்றும். வாட்ஸ்அப் நிறுவனம் இந்த புதிய அம்சத்தை கடந்த ஜூலை 2024-இல் உருவாக்கத் தொடங்கியுள்ளது. தற்போது, இது நேரடியாக சாட்களிலும், வாட்ஸ்அப் சேனல்களிலும் செயல்படும்.

இந்த அம்சத்தை பயனர்கள் செயல்படுத்தினால், அவர்கள் விரும்பும் மொழி தொகுப்புகளை (Language Packs) தேர்வு செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். தற்போது வரை ஸ்பானிஷ் (Spanish), அரபிக் (Arabic), போர்ச்சுகீஸ் (Portuguese), ஹிந்தி (Hindi)  ரஷ்யன் (Russian) ஆகிய மொழிகள் மட்டுமே தற்போது கிடைக்கின்றன. விரைவில் மற்ற மொழிகள் அப்டேட் செய்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பின் இந்த புதிய மெசேஜ் மொழிபெயர்ப்பு அம்சம், மொழி தடைகளை நீக்கி, உலகளாவிய அளவில் மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. குறிப்பாக பல மொழிகளை பேசும் இந்தியர்களுக்காக இது ஒரு மிகப் பயனுள்ள வசதியாக இருக்கும். மொழிபெயர்ப்பு செயல்பாடுகள் பயனரின் சாதனத்தில் நேரடியாக செயல்படுவதால், பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. வேற்று மொழியில் இருந்து வந்த செய்திகளையும் இப்போது ஒரு கிளிக்கில் புரிந்துகொள்ளலாம். எதிர்காலத்தில் இது அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் போது, வாட்ஸ்அப்பின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்..
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்.....
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்......
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!...
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?...
10ம் வகுப்பு தேர்வில் குழப்பம்! அட்டெண்ட் செய்திருந்தால் மார்க்!
10ம் வகுப்பு தேர்வில் குழப்பம்! அட்டெண்ட் செய்திருந்தால் மார்க்!...
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?...
வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?
வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?...
பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம் - எம்.எஸ் தோனி
பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம் - எம்.எஸ் தோனி...
ரவி மோகனின் இளமையின் ரகசியம் இதுதானா? அவரே கொடுத்த டிப்ஸ்!
ரவி மோகனின் இளமையின் ரகசியம் இதுதானா? அவரே கொடுத்த டிப்ஸ்!...