Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : வாட்ஸ்அப் பயனர்களுக்கு வந்த புதிய சிக்கல்.. மே மாதம் முதல் இந்த ஸ்மார்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!

WhatsApp Will Not Work On These Smartphones | உலகில் கோடிக்கணக்கான மக்கள் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப்பில் அவ்வப்போது பல அப்டேட்டுகள் அறிமுகம் செய்யப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அப்டேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில ஸ்மார்ட்போன்களில் மே, 2025 முதல் வாட்ஸ்அப் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

WhatsApp : வாட்ஸ்அப் பயனர்களுக்கு வந்த புதிய சிக்கல்.. மே மாதம் முதல் இந்த ஸ்மார்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 29 Apr 2025 21:22 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்காக மக்களின் முதன்மை தேர்வாக உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்களது நாளை தொடங்குவது முதல் முடிப்பது வரை வாட்ஸ்அப்பில் செலவிடுகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என அனைத்து தேவைகளுக்கும் ஒரே தேர்வாக வாட்ஸ்அப் இருப்பதனால் ஏராளமான மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். கல்வி நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யவும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யவும் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்கின்றன.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு வந்த புதிய சிக்கல்

இவ்வாறு பலரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முக்கிய காரணம் அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தான். பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிடும். இதுவே இதற்கு பில்லியன் கணக்கான பயனர்கள் இருக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு ஏராளமான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நிலையில் 2025, மே மாதம் முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.

மே மாதம் முதல் இந்த ஸ்மார்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியை அவ்வப்போது அப்டேட் செய்யும். அவ்வாறு செய்யும்போது பல பழைய மாடல் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது. அந்த வகையில், மே மாதம் முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் iOS 15.1-க்கு முன் உள்ள வெர்ஷன்களை கொண்ட ஐபோன்களில் 2025, மே மாதம் முதல் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது வாட்ஸ்அப் செயலி செயல்பட்டு வரும் ஸ்மார்ட்போனகளான ஐபோன் 5எஸ், ஐபோன் 6, ஐபோன் 6பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் செயல்படாது என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பல புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இது குழு உரையாடல்கள் மற்றும் தனி நபர் உரையாடல்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சங்களின் அறிமுகம் காரணமாக வாட்ஸ்அப் செயலியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடையில் அதிகரிக்கும் டைஃபாய்டு - மலேரியா! அறிகுள் என்ன?
கோடையில் அதிகரிக்கும் டைஃபாய்டு - மலேரியா! அறிகுள் என்ன?...
காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பு சம்பவம்
காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பு சம்பவம்...
பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது அமைச்சரவை..!
பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது அமைச்சரவை..!...
3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா - அவரே பகிர்ந்த சீக்ரெட்!
3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா - அவரே பகிர்ந்த சீக்ரெட்!...
ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி!
ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி!...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!...
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!...
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?...
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்...
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்...
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!...