Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பது எப்படி?.. முழு விவரம் இதோ!

WhatsApp Account Protection | உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நிலையில், அதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

WhatsApp : வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பது எப்படி?.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 21 Mar 2025 14:53 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலி மூலம் மிக சுலபமாக தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால் அனைத்து வயதை சேர்ந்த பொதுமக்களும் அதனை தங்கள் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் உரையாட குழுக்கள், அன்புக்குரியவர்களுடன் நேரில் பார்த்து உரையாட வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் உள்ளிட்ட சேவைகள் இதில் ள்ளன.

வாட்ஸ்அப்பில் தகவல் திருடப்படுவதற்கான அபாயம்

இந்த சேவைகளை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு தொலைவில் இருக்கும் நபர்களிடமும் உரையாட முடியும். வாட்ஸ்அப் ஒரு பிரதான தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள நிலையில், அதன் மூலம் பொதுமக்கள் சில முக்கியமான மற்றும் தனிப்பட்ட தகவல்களையும் பகிர்ந்துக்கொள்கின்றனர். இந்த தகவல்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த நிலையில், வாட்ஸ்அப் கணக்கை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

வாட்ஸ்அப் கணக்கை பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும்.

தெரியாத எண்களை பிளாக் செய்வது

வாட்ஸ்அப்பில் உங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்திருந்தால், அவற்றின் மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பிளாக் செய்யுங்கள். அது மோசடி அழைப்புகளாக இருக்கலாம்.

ஸ்கிரீன் லாக்

உங்கள் வாட்ஸ்அப் செயலியில் ஸ்கிரீன் லாக் (Screen Lock) அம்சத்தை ஆன் செய்யுங்கள்.  இதன் மூலம், நீங்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்திய ஒரு சில நிமிடங்களில் வேறு யாரேனும் அதனை பயன்படுத்த முடியாமல் தடுக்க முடியும். உதாரணமாக, நீங்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்றால் பயன்படுத்திய பிறகு ஒரு சில நொடிகளுக்கு செயலி ஆனில் இருக்கும். இந்த சூழலை பயன்படுத்தி வேறு யார் வேண்டுமானாலும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை தடுப்பதற்காக தான் இந்த அம்சம் பயன்படும்.

டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்

வாட்ஸ்அப் செயலியில் டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் அம்சத்தை அமையுங்கள். இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் செயலியை உங்களுக்கே தெரியாமல் யாரேனும் பயன்படுத்தும் போது அதற்கான ரகசிய எண் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம், நீங்கள் உங்கள் செயலியை யாரோ பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதன் மூலம், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பாக இருக்கும். இதன் மூலம் தகவல்கள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறுவதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க்கா இது? நம்ம ஊர் பரவால போல இருக்கே?! வைரலாகும் வீடியோ
நியூயார்க்கா இது? நம்ம ஊர் பரவால போல இருக்கே?! வைரலாகும் வீடியோ...
பஹல்காம் தாக்குதலில் 10 பேர் பலி - அதிகாரப்பூர்வ தகவல்
பஹல்காம் தாக்குதலில் 10 பேர் பலி - அதிகாரப்பூர்வ தகவல்...
கலக்கிய கே.எல்.ராகுல்.. லக்னோவை வீழ்த்தி டெல்லி அசத்தல்!
கலக்கிய கே.எல்.ராகுல்.. லக்னோவை வீழ்த்தி டெல்லி அசத்தல்!...
மதுரை அருகே மினி குற்றாலம் - குட்லாம்பட்டி அருவி தெரியுமா?
மதுரை அருகே மினி குற்றாலம் - குட்லாம்பட்டி அருவி தெரியுமா?...
வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் - என்ன ஸ்பெஷல்?
வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் - என்ன ஸ்பெஷல்?...
நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!
நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி.. CM ஸ்டாலின் பெருமிதம்!...
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!
இரு மாநில திருமணம்.. பிரிட்டிஷ் இன்ஃபுளூயன்சர் வைரல் வீடியோ!...
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!
அஜித் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான God Bless U வீடியோ!...
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்
பஹல்காமில் மோசமடையும் நிலைமை! 30க்கு அதிகமானோர் உயிரிழந்தாக தகவல்...
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!
ஸ்விகி, ஜொமேட்டோ ஊழியர்களுக்கு பென்சன்? புதிய திட்டம்!...
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?
சூரிய ஒளிக்கும் கல்லீரல் நோய் எதிர்ப்புக்கும் தொடர்புள்ளதா?...