Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : வாட்ஸ்அப் Screen Share ஆப்ஷன்.. பயனபடுத்துவது எப்படி?

WhatsApp Screen Share Option | மெட்ட நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பல விதமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. அத்தகைய அம்சங்களில் ஒன்றுதான் வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேர் அம்சம். இதனை பயன்படுத்தி கூகுள் மீட்டில் ஸ்கிரீன் ஷேர் செய்வதை போல வாட்ஸ்அப்பிலும் ஸ்கிரீன் ஷேர் செய்யலாம். இந்த நிலையில், அதனை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

WhatsApp : வாட்ஸ்அப் Screen Share ஆப்ஷன்.. பயனபடுத்துவது எப்படி?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 17 Apr 2025 18:23 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம் (Communication), பொழுதுபோக்கு (Entertainment), தகவல் சேகரிப்பு (Information Storage), குழு உரையாடல் (Group Conversation) உள்ளிட்ட பல சேவைகளை வாட்ஸ்அப் வழங்கி வரும் நிலையில், அது பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுடன் உரையாடுவதற்காக இந்த செயலியை பயன்படுத்துகின்றன.

பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள வாட்ஸ்அப்

தற்போதைய காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் இல்லாத நபர்களையே பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பொதுமக்களின் வாழ்வியலோடு வாட்ஸ்அப் ஒன்றினைந்துள்ளது. வாட்ஸ்அப் உள்ள சிறப்பு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது தான் இந்த வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேர் (WhatsApp Screen Share). இந்த அம்சம் பயனர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. காரணம், குழு உரையாடல்களில் மட்டுமே உள்ள இந்த அம்சம் வாட்ஸ்அப்பிலும் உள்ளதால் எளிதாக எந்த ஒரு ஆவணத்தையும் பகிரவும், அது குறித்து விளக்கவும் முடியும். இத்தகைய பல சிறப்புகளை கொண்ட இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேர் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

மொபைல் போன்

  1. மொபைல் போனில் இந்த ஸ்கிரீன் ஷேர் அம்சத்தை பயன்படுத்த நீங்கள் முதலில் ஒருவருக்கு வீடியோ கால் (Video Call) செய்ய வேண்டும்.
  2. பிறகு ஸ்கிரீனை கிளிக் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐகானை (Icon) கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதற்கு பிறகு நீங்கள் உங்கள் திரையை பகிர்வதற்கு உறுதி அளிக்க ஒரு குறுஞ்செய்தி தோன்றும்.
  4. நீங்கள் அதனை ஏற்ற பிறகு மூன்று நொடிகளுக்குள் உங்களது ஸ்கிரீன் மற்றவர்களுக்கு தெரிய தொடங்கும்.
  5. அதனை பயன்படுத்தி நீங்கள் எதனை பகிர விரும்புகிறீர்களோ அதனை பகிரலாம்.
  6. நீங்கள் ஷேரிங்கை நிறுத்த விரும்பினால் திரையை கிளிக் செய்து ஸ்டாப் (Stop) என்ற பட்டனை கிளிக் செய்தால் ஷேர் செய்வது நிறுத்தப்படும்.

டெஸ்க்டாப்பில் ஷேர் செய்வது எப்படி?

  1. நீங்கள் டெஸ்க்டாப்பில் (Desktop) ஷேர் செய்ய வேண்டும் என்றால், டெஸ்க்டாப்புக்கு ஏற்ற செயலி உங்களிடம் இருக்க வேண்டும்.
  2. ஸ்கிரீனை பகிர்வதற்கு வீடியோ கால் செய்ய வேண்டும்.
  3. பிறகு ஷேர் (Share) ஐகானை கிளிக் செய்து உங்கள் ஸ்கிரீனை ஷேர் செய்யலாம்.
  4. அப்போது உங்களுக்கு முழு ஸ்கிரீனையும் பகிர வேண்டுமா அல்லது பகுதியாக பகிர வேண்டுமா என்பது கேட்கப்படும்.
  5. அதனை தேர்வு செய்து ஷேர் செய்யலாம்.
  6. மொபைல் போனில் செய்தவதை போலவே டெஸ்க்டாப்பிலும் ஸ்டாப் என்பதை கிளிக் செய்து நிறுத்திக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி சுலபமாக மொபைல் போன் மற்றும் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேர் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.. நடிகை பூஜா ஹெக்டே சொன்ன தகவல்!
நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.. நடிகை பூஜா ஹெக்டே சொன்ன தகவல்!...
10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?...
சனிபகவானின் அதிர்ஷ்ட பார்வை.. இந்த ராசிகளுக்கு நல்லகாலம்
சனிபகவானின் அதிர்ஷ்ட பார்வை.. இந்த ராசிகளுக்கு நல்லகாலம்...
அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை இவ்வளவு வசூல் செய்துள்ளதா?
அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை இவ்வளவு வசூல் செய்துள்ளதா?...
கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!
கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!...
பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?
பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?...
சமையல் எண்ணெயில் கொழுப்பு அமிலம்... மார்பக புற்றுநோய் வருமா?
சமையல் எண்ணெயில் கொழுப்பு அமிலம்... மார்பக புற்றுநோய் வருமா?...
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி..
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி.....
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ...
சீலம்பூர் கொலை: "லேடி டான்" என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை:
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!...