வாட்ஸ் அப்பின் புதிய அம்சம் – இனி மெசேஜ் பண்றது ஈஸி – அப்படி என்ன அப்டேட் தெரியுமா?
WhatsApp: பயனர்கள் தங்கள் செய்திகளை நிர்வகிக்க ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. சாதாரணமாக, ஒருவருடன் உரையாடும்போது, அவர்கள் குறிப்பிட்ட செய்திக்கு பதிலளித்தால், முந்தைய உரையாடல்களை கவனிக்கப்படாமல் போகலாம். அதேசமயம் நாம் பழைய செய்திகளை தேட முற்படும்போதும் மெசேஜ்களுக்கு அளிக்கப்படும் பதில்கள் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது

வாட்ஸ்அப்
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் (Social Media) தகவல் பரிமாற்றத்திற்கும், தொடர்புகளுக்குமான முக்கியமான கருவியாக உள்ளன. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப், லின்க்டின் போன்ற பல்வேறு சமூக ஊடகங்கள், மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டன. இவை தகவல்களை பகிர்ந்து கொள்ள, பொழுதுபோக்குக்காக, தொழில் வளர்ச்சிக்காக பயன்படுகின்றன. குறிப்பாக வணிகம், கல்வி, அரசியல் போன்றவற்றிற்கு சமூக ஊடகங்கள் ஒரு ஆற்றல்மிக்க கருவியாக உள்ளன. இதில் வாட்ஸ் அப் (WhatsApp) பல்வேறு வகைகளில் பயனர்களுக்கு உதவுகிறது. இது உடனடி தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கி, இலவசமாக செய்திகள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை அனுப்பும் வசதியை வழங்குகிறது. குறிப்பாக, நண்பர்கள், குடும்பத்தினர், மற்றும் தொழிலுக்கான குழுக்களில் இணைந்து உரையாடலாம். வணிக நிறுவனங்களுக்கு WhatsApp Business மூலம் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், பொருட்களை விற்பனை செய்யவும் உதவுகிறது. கல்விக்காகவும் இது பயன்படுகிறது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி விவாதங்களை நடத்தலாம். மேலும், வாட்ஸ் அப் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்காக எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் மற்றும் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் போன்ற பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.
புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாட்ஸ் அப்
இந்த நிலையில் வாட்ஸ் அப் மேலும் ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்து வருகிறது தகவல் வெளியாகியுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவலின்படி, பயனர்கள் தங்கள் செய்திகளை நிர்வகிக்க ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது. சாதாரணமாக, ஒருவருடன் உரையாடும்போது, அவர்கள் குறிப்பிட்ட செய்திக்கு பதிலளித்தால், முந்தைய உரையாடல்களை கவனிக்கப்படாமல் போகலாம். அதேசமயம் நாம் பழைய செய்திகளை தேட முற்படும்போதும் மெசேஜ்களுக்கு அளிக்கப்படும் பதில்கள் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்க, ஒரே செய்திக்கு அளிக்கப்படும் அனைத்து பதில்களும் ஒரு திரெட்(Thread) ஆக இணைக்கப்படும். இது உரையாடல்களை தெளிவாக அணுகவும், ஒழுங்குபடுத்தவும் உதவும்.
தற்போது இதுகுறித்த பரிசோதனை முயற்சியில் வாட்ஸ் அப் இறங்கியுள்ளது. இது தனிப்பட்ட உரையாடல், குரூப் உரையாடல்கள், சேனல், மற்றும் கம்யூனிட்டி போன்றவற்றில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் சேனல்களில் பதிலளிப்பது தொடர்பான அப்டேட்டும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கம்யூனிட்டியில் பகிரும் தகவல்களுக்கும் யூசர்கள் பதிலளிகக முடியும். மேலும் கம்யூனிட்டியில் நடக்கும் உரையாடல்களில் நம்மால் பங்கு பெற முடியும்.
இது எப்படி பலனளிக்கும் ?
ஒரு யூசர் மெசேஜ்க்கு பதிலளிக்கும்போது அந்த பதில் ஒரிஜினல் மெசேஜின் கீழ் இருக்கும். அதனால் உங்களால் ஒரிஜினல் மேசேஜை எந்த சிக்கலும் இல்லாமல் பார்க்கலாம். எதனால் வாட்ஸ் அப் உரையாடல்கள் தொகுப்பாக எளிதில் காண கூடியதாக இருக்கும். குருப் சாட்களில் உரையாடல்களின் போது ஒரே மெசேஜிற்கு பல யூசர்கள் பதிலளிக்கும் போது ஒரிஜினல் மெசேஜை திரெட்ஸ் நம்மை குறிப்பிட்ட மெசேஜை கண்டுபிடிக்க உதவும். அதே போல திரெட்ஸின் மூலம் தனிப்பட் மெசேஜ்களையும் அது தொடர்பான உரையாடல்களையும் பார்க்க முடியும். குறிப்பாக வேலை தொடர்பாக வாட்ஸ்அப் குரூப்களில் இருப்பவர்களுக்கு அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை இனி எளிதில் நிர்வகிக்க முடியும் என்று கூறப்படுகிறது.