WhatsApp : 60 நொடிகள் இல்லை, இனி 90 நொடிகள்.. வாட்ஸ்அப்பில் வரப்போகும் அசத்தல் அம்சம்!
WhatsApp Status Duration Into 90 Seconds | வாட்ஸ்அப் செயலியில் உள்ள முக்கிய அம்சம் தான் ஸ்டேட்டஸ். இது பெரும்பாலான பயனர்களுக்கு மிகவும் பிடித்தமான அம்சமாக உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி உலக அளவில் மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது. காரணம், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலி தகவல் பரிமாற்றம் (Communication), பொழுதுபோக்கு (Entertainment) என அனைத்து தேவைகளுக்கும் ஒரே தீர்வாக உள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால், ஆடியோ கால், ஆவண பரிமாற்றம், குரல் செய்தி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படும் புதிய அப்டேட்டுகள்
வாட்ஸ்அப் செயலியில் என்னதான் பல அட்டகாசமான அம்சங்கள் இருந்தாலும், அதில் அவ்வப்போது பல சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தேவை மற்றும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அப்டேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ்அப் செயலி குறித்து ஒரு அசத்தலான தகவல் வெளியாகியுள்ளது. இது பயனர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் மியூசிக் ஆட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன அம்சம் அதன் மூலம் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் எக்ஸ் பதிவு
big news for people who love to put lyrics on their status: now you can add music, too
— WhatsApp (@WhatsApp) April 1, 2025
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட உள்ள முக்கிய அம்சம்
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அப்லோடு செய்யும் அம்சம் உள்ளது. இதனை பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். தற்போதைய நிலவரத்தின் படி, வாடஸ்அப் ஸ்டேட்டசில் 60 நொடிகள் வரை ஸ்டேட்டஸ் அப்லோடு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டசுக்கான கால அளவீடு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, முன்னதாக 60 நொடிகளாக இருந்த இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கால அளவீடு 90 விநாடிகளாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ஸ்டேட்டஸ் பிரியர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.