Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லேப்டாப், கணினியில் WhatsApp பயன்படுத்தும் நபரா நீங்கள்.. அரசு எச்சரிக்கை!

WhatsApp Desktop App Security Risk | இந்திய அரசு, வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயன்பாட்டில் உள்ள பாதுகாப்புப் பிழை குறித்து கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. CERT-இன் அறிவிப்பின்படி, ஹேக்கர்கள் பயனர்களின் கணக்குகள் மற்றும் தகவல்களை அணுக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இந்த நிலையில் அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

லேப்டாப், கணினியில் WhatsApp பயன்படுத்தும் நபரா நீங்கள்.. அரசு எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 13 Apr 2025 23:52 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான இந்தியர்களும் இந்த வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், தகவல் பரிமாற்றம் மிகவும் எளிமையாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய பங்கு வகிப்பது தான் வாட்ஸ்அப். வாட்ஸ்அப் மூலம் பயனர்கள் ஆடியோ கால் (Audio Call), வீடியோ கால் (Video Call), குறுஞ்செய்தி (Message) உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

லேப்டாப் மற்றும் கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பொதுமக்கள்

வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் மட்டுமன்றி தரவுகள், ஆவணங்களை பரிமாறிக்கொள்ள சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதன் காரணமாக எராளமான நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுடன் உரையாடுவதற்காக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இதற்காக  ஊழியர்களும் தங்களது பணி நேரத்தின் போது வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்பதால் தாங்கள் பணி செய்யும் லேப்டாப் (laptop) மற்றும் கணினிகளில் (Computer) வாட்ஸ்அப் செயலியை இணைத்து பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் தான் அரசு லேப்டாப் மற்று கண்னியில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வெப் வாட்ஸ்அப் – அரசு எச்சரிக்கை

இந்தியாவை பொருத்தவரை ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுடன் வாட்ஸ்அப்பில்  உரையாடுவது மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யும் நிலையில், அது குறித்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பிழையின் காரணமாக மில்லியன் கணக்கான பயனர்களுக்கு இந்திய அரசு இந்த கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு நிறுவனமான CERT  (Indian Computer Emergency Response Team) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லேப்டாம், கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?

CERT கூறியுள்ளதாவது, கணினி மற்றும் லேப்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்கள் கூடுதல் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பின் டெஸ்க்டாப் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க பாதிப்பு அடையாளம் காணப்படுவதாக அது கூறியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் கணக்கு மற்றும் அதில் பகிரப்படும் தகவல்களை ஹேக்கர்கள் அணுக கூடியதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அது எச்சரித்துள்ளது. எனவே, நீங்கள் லேப்டாப் அல்லது கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபராக இருந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 5 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்.. நிலவரம் என்ன?
அடுத்த 5 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்.. நிலவரம் என்ன?...
கருமாரி துணையிருப்பாள்.. நடிகை நளினி வாழ்வில் நடந்த அதிசயம்
கருமாரி துணையிருப்பாள்.. நடிகை நளினி வாழ்வில் நடந்த அதிசயம்...
இனி டோல்கேட்டில் நிற்காமல் செல்லலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு!
இனி டோல்கேட்டில் நிற்காமல் செல்லலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு!...
பள்ளியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கரம்
பள்ளியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கரம்...
அழகி படத்தில் நடித்த சிறுவன் பாலுவா இது? ஷாக்கான தேவயானி
அழகி படத்தில் நடித்த சிறுவன் பாலுவா இது? ஷாக்கான தேவயானி...
ஆதார் கார்டில் முகவரி மாற்ற வேண்டுமா? - சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
ஆதார் கார்டில் முகவரி மாற்ற வேண்டுமா? - சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!...
மைக்ரோசாஃப்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட வனியா அகர்வால்..
மைக்ரோசாஃப்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட வனியா அகர்வால்.....
மாநில உரிமை.. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்
மாநில உரிமை.. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்...
பழைய அணிக்கு எதிராக ஷ்ரேயாஸ் களம்! KKR-ஐ வீழ்த்துமா PBKS..?
பழைய அணிக்கு எதிராக ஷ்ரேயாஸ் களம்! KKR-ஐ வீழ்த்துமா PBKS..?...
சாலையில் செல்லும்போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
சாலையில் செல்லும்போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்!...
2026ல் சனிப்பெயர்ச்சி.. தேதி, நேரத்தை அறிவித்த திருநள்ளாறு கோயில்
2026ல் சனிப்பெயர்ச்சி.. தேதி, நேரத்தை அறிவித்த திருநள்ளாறு கோயில்...