வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் – அப்படி என்ன ஸ்பெஷல்?

Vivo X200s: விவோ எக்ஸ் 200எஸ் போன் அதன் MediaTek Dimensity 9400+ SoC மற்றும் 6,200mAh பேட்டரி என பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருப்பதால், கேமிங், சிறந்த கேமரா மற்றும் அதிக செயல்திறன் தேவைப்படுவோர் போன்ற பயனர்களுக்கு சிறந்த தேர்வு ஆக கருதப்படுகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற விவோ எக்200எஸ் - அப்படி என்ன ஸ்பெஷல்?

விவோ எக்ஸ்200எஸ்

Updated On: 

22 Apr 2025 22:08 PM

விவோ (Vivo) நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ் 200எஸ்( Vivo X200s-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் புதிய MediaTek Dimensity 9400+ SoC மற்றும் பெரிய 6,200mAh பேட்டரி போன்ற சிறப்பு அம்சங்களுடன் வருவது குறிப்பிடத்தக்கது.  செயல்திறன், பேட்டரி ஆயுள் மற்றும் கேமரா அம்சங்களின் அடிப்படையில் புதிய ஸ்மார்ட்போனை (Smartphones) தேர்ந்தெடுக்க விரும்பும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக இதில் உள்ள கேமரா வசதிகள் யூடியூபர், சோஷியல் மீடிய கிரியேட்டர்கள் மற்றும் புகைப்பட விரும்பிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த போனின் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் இதன் ஹைலைட்டாக அமைந்துள்ளது.

விவோ எக்ஸ்200எஸ் இன் முக்கிய அம்சங்கள்

விவோ எக்ஸ்200எஸ் போன் MediaTek Dimensity 9400+ SoC செயல்படும். இது சிறப்பான செயல்திறன் மற்றும் சிறந்த கிராபிக்ஸ் செயல்பாட்டை வழங்குகிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள 8ஜிபி/12ஜிபி ரேம் யூசர்கள் சிரமமின்றி பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யலாம்.  இதில் 256ஜிபி மற்றும் 512ஜிபி என இரண்டு விதமான ஸ்டோரேஜ் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய விவோ எக்ஸ்200எஸ் மொபைலில் 6,200mAh பேட்டரி  கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதன் காரணமாக பயணங்களின் போது வீடியோ பார்ப்பது கேமிங் என தடையின்றி பயன்படுத்த உதவுகிறது. மேலும் 66 வாட்ஸ் சார்ஜிங் வசதியால் 50 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

வீடியோ கிரியேட்டர்களுக்கு ஏற்ற போன்

இந்த போனில் கொடுக்கப்பட்ட 108எம்பி கேமரா அதிக ரிசல்யூசனுடன் துல்லியமான படங்களை எடுக்க உதவும். மேலும் 8எம்பி அளவிலான அல்ட்ரா-வைட் கேமரா வசதியும், 2 எம்பி மேக்ரோ கேமரா வசதியும் சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க உதவும். இதன் காரணமாக சோஷியல் மீடியா கிரியேட்டர்ஸ்க்கு ஏற்ற போனாக கருதப்படுகிறது.

இதில் கொடுக்கப்பட்ட 6.8 இஞ்ச் AMOLED திரை 120 ஹெட்ஸ் ரீஃபிரெஷ் ரேட் மற்றும் டால்பி விஷன் ஆகியவை தெளிவான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்.

விவோ எக்ஸ்200எஸ் போனின் விலை

இந்த போன் இந்தியாவில் இரண்டு விலைகளில் கிடைக்கிறது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் ரூ.39, 990க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் ரூ. 44, 990க்கும் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கிடைக்கும். இதனை ஆன்லைனிலும், விவோ அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் விரைவில் பெற முடியும். விவோ எக்ஸ்200எஸ் அதன் சிறந்த அம்சங்கள் மற்றும் செயல்திறன் மூலம் இந்தியாவின் பிரபலமான மொபைல் ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)